யாருக்கும் காயமில்லாமல் வனத்துறையினரால் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று கூண்டில் இருந்து மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டபோது சிறுத்தை சீறிப் பாய்ந்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனத்துறை ஊழியர்களின் பணி என்பது வனத்தில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, வன உயிரினங்களையும் பாதுகாப்பதும்தான். வனவிலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடுபவர்களைத் தடுப்பது, வனவிலங்குகளைப் பாதுகாப்பது, வனவிலங்குகள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அவற்றை பாதுகாப்பாக மீட்பது, வனவிலங்குகள் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும்போது, மனிதர்கள் - வனவிலங்குகள் மோதல் ஏற்படாமல் பாதுகாப்பாக வனவிலங்குகளை காட்டுக்குள் அனுப்புதல் என்று அவர்களின் பணி கடினமான பணி.
அந்த வகையில், வனத்துறை ஊழியர்களால் யாருக்கும் காயம் இலலாமல் கூண்டு வைத்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று, பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் காட்டுக்குள் விட்டபோது, கூண்டில் இருந்து சிறுத்தை சீறிப் பாய்ந்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rescued this beautiful hunk by our team from human habitat. Back to wild without any injury to human or animal. pic.twitter.com/hhsaS962p1
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 22, 2024
இந்த வீடியோ ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு வாகனத்தில் உள்ள கூண்டில் ஒரு சிறுத்தை இருக்கிறது.
இந்த சிறுத்தை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த சிறுத்தையை மீண்டும் காட்டில் விடுவதற்காக வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், காட்டுப் பகுதிக்கு வந்து, மிகவும் எச்சரிக்கையாக கூண்டைத் திறந்து விடுகிறார்கள். கூண்டைத் திறந்ததும் சிறுத்தை கூண்டில் இருந்து மின்னல் வேகத்த்தில் சீறிப் பாய்ந்து காட்டுக்குள் ஓடி மறைகிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள குறித்து எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மனித வாழ்விடத்திலிருந்து எங்கள் குழுவினரால் இந்த அழகான சிறுத்தையை மீட்டோம். மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ எந்தவிதமான காயமும் இல்லாமல் காட்டுக்குத் திரும்பியது.” என்று குறிப்பிட்டுள்ளார். கூண்டில் இருந்து சிறுத்தை சீறிப் பாய்ந்து ஓடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.