சென்னையைச் சேர்ந்த உமாமகேஷ் நேற்று மரணமடைந்தார். இவருக்கு வயது 72. இன்று செய்தித் தாளில், இவரது மரணம் குறித்த இரங்கல் செய்தியும் வெளியிடப்பட்டது. செய்தித் தாளில் வெளியான இரங்கல் மடலை எழுதியவரும் உமாமகேஷ் தான். இரங்கல் மடலில் கூறிய கருத்துக்கள் படிப்போர் மனதில் ஒரு விதமான உணர்வை எற்படுத்தியது.
"எனது உற்சாகமான வாழ்க்கையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. எனது பார்ட்டி முடிந்துவிட்டது. உங்கள் யாருக்கும் ஹேங்கொவர் இல்லை என்று நம்புகிறேன். அனைவருக்கும் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. நன்றாக வாழவும். உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள். பார்ட்டியைத் தொடரவும்" என்று தெரிவித்தார்.
இந்த பூமி என்னும் கிராமத்தில் மதமற்ற குடிமகனாக வாழ்ந்தவன் என்று உமாமகேஷ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இவர், உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்து விட்டார். இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் வீட்டுக்கு வருகைத் தருவதை தவிர்க்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு, மிகவும் அபாயகரமான இருதய அறுவை சிகிச்சை காரணமாக இவர் உமாமகேஷ் உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பாக, தான் உயிர் இழக்க நேரிட்டால் தனது சொந்த இரங்கல் மடலை செய்தி தாளிலும், முகநூலிலும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.