வீடியோ: மரண தருவாயில் இருக்கும் ரசிகைக்காக மனமுருகி பேசிய ஷாருக்கான்

”நீங்கள் விரைவில் குணமாகிவிடுவீர்கள். நாம் இருவரும் விரைவிலேயே சந்திப்போம். அப்போது, நான் நடித்து உங்களின் விருப்ப பாடலை நான் ஆடுவேன்”

,actor shah rukh khan, bollywood, #srkmeetsaruna

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிநிலையில் சிக்கி தவிக்கும் பெண் ஒருவர் தன்னை பார்க்க ஆசைப்பட்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் அப்பெண்ணுக்கு மனதை உருக்கும் வகையில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமான நிலையில் உள்ள அருணா என்ற நடுத்தர வயது பெண் ஒருவர், தனக்கு பிடித்த கதாநாயகன் சாருகானை பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறார்.

கோடிக்கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் சாருகானுக்கு, இந்த ரசிகையின் கடைசி ஆசை தெரியுமா? அதனால், ட்விட்டரில் அப்பெண்ணின் ஆசை குறித்து, பலரும் சாருக்கானுக்கு டேக் செய்தனர். அதன்மூலம், அப்பெண்ணை சாருக்கான் சந்திக்க மாட்டாரா என நெட்டிசன்கள் #SRKMeetsAruna என்ற ஹேஷ் டேக் மூலம் ட்வீட் செய்து அதனை பிரபலப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அருணாவுக்காக ஷாருக்கான் மனமுருகி பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அருணாவின் பிள்ளைகள் அக்‌ஷத் மற்றும் பிரியங்காவிடம் அவரது உடல்நிலை குறித்து தான் கேட்டறிந்ததாகவும், அவர் பூரண நலமடைய தான் உட்பட குடும்பத்திலுள்ள அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் ஷாருகான் தெரிவித்திருக்கிறார். மேலும், அவருடைய நேர்மறையான என்ணங்கள் அவரை விரைவில் நலமாக்கிவிடும் எனவும் அவர் கூறினார்.

”நீங்கள் விரைவில் குணமாகிவிடுவீர்கள். நாம் இருவரும் விரைவிலேயே சந்திப்போம். அப்போது, நான் நடித்து உங்களின் விருப்ப பாடலை நான் ஆடுவேன்”, என உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோவால் நெகிழ்ந்த பலரும் ஷாருக்கானின் அன்பு, பாசம் குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shah rukh khan reaches out to cancer patient whose last wish is to meet him twitterati root for his kind gesture

Next Story
தீபாவளியன்று இந்தியா இப்படித்தான் இருந்தது: அட! இந்த புகைப்படம் உண்மைதாங்கdiwali festival, india during diwali, diwali 2017
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com