/indian-express-tamil/media/media_files/2025/10/21/sivakasi-diwali-drone-video-2025-10-21-15-20-53.jpg)
Drone visuals Diwali
தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழகமே ஒளியில் மின்னியது! வீதிகளும், வீடுகளும், நகரத்தின் வானமும் மெழுகுவர்த்திகள், தீபங்கள் மற்றும் வாணவேடிக்கைகளால் ஜொலித்தன. இந்த வண்ணமயமான கொண்டாட்ட மனநிலையை, ஒரு அற்புதமான ட்ரோன் வீடியோ பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
பட்டாசுகளின் நகரமான சிவகாசி!
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்த வீடியோவை தனது 'X' பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள், பட்டாசுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற இந்த நகரத்தின் இரவு வானம் வாணவேடிக்கைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகை அற்புதமாகக் காட்டுகிறது.
வானிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் காட்சியில், நகரம் முழுவதும் அழகாக ஒளியூட்டப்பட்டு, வானவேடிக்கை வர்ணங்களால் இரவு வானம் மின்னியதை ஒரு பறவையின் பார்வையில் காண முடிந்தது.
#WATCH | Tamil Nadu: Drone visuals from Sivakasi of Virudhunagar district show a beautifully illuminated city and a skyline adorned with fireworks, on #Diwalipic.twitter.com/pT2TQYhXL3
— ANI (@ANI) October 20, 2025
இந்த வீடியோ 'X' தளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
தீபாவளி ஒளியில் ஜொலித்த ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமல்ல. பெங்களூருவின் கொண்டாட்டங்களும் வானில் இருந்து படமாக்கப்பட்டு வைரலாகின.
ஸ்ரீஹரி கரந்த் என்பவர் வெளியிட்ட ஒரு நிமிட காணொளியில், பெங்களூரு நகரம் மெதுவாக ஒளியூட்டப்படுவதும், வாணவேடிக்கைகள் வானத்தை அலங்கரிப்பதும், கொண்டாட்ட மனநிலையுடன் பெருநகரம் உயிர்ப்புடன் இருப்பதும் காட்டப்பட்டது.
இந்த வீடியோவைப் பார்த்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட, "இது மிகச் சிறப்பாக வந்துள்ளது. இந்தக் களம் கலைநயம் மிக்கது. கேமரா வெளிச்சத்தின் பிரஷ் ஸ்ட்ரோக்குகள். சிறந்த முயற்சி" என்று பாராட்டி தனது 'X' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us