Advertisment

வெறும் கைகளால் பாம்பை மீட்ட துணிச்சலான வன அலுவலர்; வைரல் வீடியோ

கோவாவில் வனத்துறை அலுவலர் ஒருவர் கூரை ஓட்டில் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்து மீட்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி ஷைலேந்திர சிங் ஐ.எஃப்.எஸ் டுவிட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வன அலுவலரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
snake rescue viral video, Snake, Snake videos, snake rescue, Goa, பாம்பை வெறும் கைகளால் பிடித்த வன அலுவலர், வைரல் வீடியோ, கோவா வன அலுவலர், பாம்பு, forest department, Cotigao Wildlife Sanctuary, Trending news, Tamil Indian Express news

2 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில், கோவாவின் கோட்டிகாவோ வனவிலங்கு சரணாலயத்தில், கூரையில் ஓட்டில் ஏறிய பாம்பை வன அலுவலர் ஒருவர் வெறும் கைகளால் லாவகமாக மீட்கிறார் கூரையில் ஓடுகளில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிப்பதற்காக அந்த அலுவலர் கட்டிடத்தின் கூரையிலிருந்து ஒரு சில ஓடுகளை அகற்றுகிறார். பின்னர், அவர் ஒரு குச்சியின் உதவியுடன் அந்த பாம்பை மிகவும் லாவகமாக வெறும் கைகளால் அதன் வாலைப் பிடி ஒரு நீல நிற பையில் வைக்கிறார்.

இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த வனத்துறை அதிகாரி சைலேந்திர சிங், “கோவாவின் கோட்டிகாவோ வனவிலங்கு சரணாலயத்தில் வன அலுவலரால் மருத்துவ மற்றும் பாதிப்பு இல்லாத வகையில் பாம்பை மீட்டனர். இது புலி, சிறுத்தை, யானை அல்ல, வன அலுவலர்கள் இவற்றை சமாளிக்க வேண்டும்! ” என்று தெரிவிட்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலர், வெறும் கைகளால் பாம்பை பிடித்த வன அலுவலரின் துணிச்சலைப் பாராட்டினர். சிலர் அவரது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.

இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பாருங்கள். நீங்களும் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Video Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment