Advertisment

தந்தையின் சவப்பெட்டி முன்பு நின்று போஸ் கொடுத்த சோசியல் மீடியா பிரபலம்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

ரிவெராவுக்கு ஆதரவாக பேசிய சிலர், உங்களுக்கு பிடித்த ஒருவரின் முகத்தை இறுதியாக அன்று தான் பார்க்கப் போகின்றீர்கள் இ இதனால் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
Social media influencer takes pictures with casket at fathers funeral

Social media influencer takes pictures with casket at fathers funeral : மியாமியை சேர்ந்த 20 வயது மதிக்கதக்க ஜெய்னே ரிவெரா என்ற பெண் தன்னுடைய தந்தை இறந்த பிறகு அவருடைய சப்பெட்டி அருகே நின்று புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தின் மேலே, பட்டாம்பூச்சி பறந்து சென்றுவிட்டது. RIP அப்பா, நீங்கள் என்னுடைய சிறந்த நண்பனாக இருந்தீர்கள். நலமுடன் வாழப்பட்ட வாழ்வு என்று ரிவெரா அதில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

அவர் அந்த புகைப்படங்களை பதிவு செய்த சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் நல்ல ரீதியாக அல்ல. தந்தையின் சவப்பெட்டி திறந்த நிலையில் இருக்க, புகைப்படம் எடுத்த அவரை, “இந்த இன்ஸ்டகிராம் மாடலின் தந்தை இறந்துவிட்டார். ஆனால் இவர் தந்தை இருக்கும் சவப்பெட்டியை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என்றும் சாடி வருகின்றனர்

தங்களின் சோகத்தை கையாள பலரும் பல்வேறு முறைகளை பின்பற்றுகின்றனர். சிலர் பாரம்பரிய முறையை தேர்வு செய்கிறார்கள். சிலர் அதனை கடந்து வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை என் தந்தை உயிருடன் இருந்தால் எப்படி நான் கொண்டாடியிருப்பேனோ அப்படியே புகைப்படங்களையும் எடுத்தேன். நான் அதை பதிவு செய்ததில் தவறு ஏதும் இல்லை என்று உணருகிறேன். நான் அதை நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

பலர் இவரின் கருத்துக்கு பலர் எதிர்ப்பும் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ரிவெராவுக்கு ஆதரவாக பேசிய சிலர், உங்களுக்கு பிடித்த ஒருவரின் முகத்தை இறுதியாக அன்று தான் பார்க்கப் போகின்றீர்கள் இ இதனால் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment