தமிழ்நாட்டில் யானைகள் முகாம்களில் யானைகளை சிறந்த முறையில் பராமரிக்கும் வகையில், பாகன்கள் மற்றும் உதவி செய்யும் காவடிகள் தாய்லாந்தில் உள்ள யானைகள் முகாம்களில் சிறப்பு பயிற்சி பெறும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை, முதுமலை சரணாலயங்களில் உள்ள யானைகளை மேலும் சிறந்த முறையில் பராமரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, வனத்துறையைச் சோ்ந்த 14 பாகன்கள், வனச் சரகா்கள் ஆகியோருக்கு தாய்லாந்தில் உல்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதுமலையைச் சேர்ந்த வளர்ப்பு யானை பாகன்கள் மற்றும் காவடிகள் 8 பேர், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 14 பேர், தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க வனத்துறை திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, முதுமலையில் இருந்து கிளம்பிய யானை பாகன்கள் மற்றும் காவடிகள் தாய்லாந்துக்கு திங்கள்கிழமை சென்றனர். அங்கே அவர்களுக்கு யானை பராமரிப்பது பயிற்சி அளிக்கப்படுகிறது.
தாய்லாந்து சென்ற தமிழ்நாட்டு யானைப் பாகன்கள் மற்றும் காவடிகள், தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கே யானைப் பாகன்கள் முகாமில் உள்ள யானைகளுக்கு ஏற்படும் நோய்கள், தோல் பிரச்னைகளைப் பரிசோதிக்கும் நுட்பங்கள், யானைகளைக் குளிப்பாட்டுதல், குட்டி யானைகளைப் பராமரிக்கும் நுட்பங்கள் என பராமரிப்பு பயிற்சி பெறுகிறார்கள்.
தமிழ்நாட்டு யானைப் பாகன்கள் மற்றும் காவடிகள் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோவில் தாய்லாந்து யானைகள் பாதுகப்பு மையத்தின் யானைகள் பராமரிப்பாளர்கள் தமிழக யானைகளுக்கு யானைகளின் உடல்நிலையை பரிசோதிப்பது யானைகளை ஆற்றுக்குள் அழைத்துச் சென்று குளிப்பாட்டும் பயிற்சி அளிக்கின்றனர்.
சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் யானைப் பாகன்கள் மற்றும் காவடிகள் பயிற்சி பெறுகிறார்கள். முகாம் யானைகளின் நோய் பரிசோதனை மற்றும் தோல் பிரச்சனைகளை பரிசோதிக்கும் நுட்பங்கள், யானையைக் குளிப்பாட்டுதல், குட்டி யானைகளை பராமரித்தல் போன்ற பயிற்சி பெறுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு யானைப் பாகன்கள் மற்றும் காவடிகள் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.