Advertisment

புள்ளிக்கு நடுவுல ஒரு பிரபலம் இருக்காரு... உங்க கண்ணுக்கு தெரிகிறதா?

நமக்கு எவ்வவளவு அதிகமாக ஆர்வம் வருகிறதோ அந்த அளவிற்கு அந்த ஓவியத்தில் அதிமாக தகவல்களும், நாம் கண்டறிய வேண்டிய சில மர்மங்களும் அடங்கி இருக்கும்

author-image
WebDesk
Jun 18, 2022 18:04 IST
New Update
புள்ளிக்கு நடுவுல ஒரு பிரபலம் இருக்காரு... உங்க கண்ணுக்கு தெரிகிறதா?

சமீப காலமாக ஆப்டிக்கல் இல்யூஷன் வகையாக புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.லியோனார்டோ டா வின்சி முதல் மைக்கேலேஞ்சலோ, ரஃபேல் வரை, மறுமலர்ச்சி ஓவியர்களின் கலைப்படைப்புகள் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த ரிவெட்டிங் ஓவியங்கள் நாம் சாதாரணமாக பார்ப்பதை விட கூடுதல் நேரம் எடுத்து பார்க்கும் அளவுக்கு நம்மில் ஆர்வத்தை தூண்டும்.

Advertisment

நமக்கு எவ்வவளவு அதிகமாக ஆர்வம் வருகிறதோ அந்த அளவிற்கு அந்த ஓவியத்தில் அதிமாக தகவல்களும், நாம் கண்டறிய வேண்டிய சில மர்மங்களும் அடங்கி இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மர்மங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிமையாக இருக்காது. ஒரு வகையாக ஆர்வமிகுதியாக சவாலாக இருக்கும். அந்த வகையில் தற்போது சில படங்கள் வெளியாகியுள்ளது.

புள்ளிகளின் சுழல்களின் மூலம் மறைக்கப்பட்ட படத்தில் ஒரு பிரபலம் இருக்கிறார். அவரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பெரிய சவால். இதில் சாதாரணமாக நாம் பார்த்தால் அதில் வெறும் புள்ளிகள் மட்டும்தான் தெரியும். ஆனால் சற்று உற்றுநோக்கினால் ஒரு பிரபலத்தின் உருவப்படம் உருவாக்கும். அந்த படம் புள்ளிகளுக்கு இடையில் மறைக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிகளுக்கு இடையில் இருக்கும் பிரபலத்தைக் கண்டறிவதற்கான எளிதான வழி நீங்கள் இந்த புள்ளிகளை மறந்து எவ்வளவு தூரம் உள்ளே சென்று உற்று நோக்குகிறீர்களோ அவ்வளவு தெளிவாக அந்த பிரபலத்தின் முகம் தெரியும். நீங்கள் பார்க்கும் சாதனத்தை அசைப்பது மற்றும் ஒரு கோணத்தில் நிற்பது உள்ளிட்ட செயல்களை செய்வது இந்த படத்தில் இருக்கும் பிரபலத்தை விரைவாக கண்டுபிடிக்க வேறு சில வழிகளாகும்.

Can you work out who the hidden celebrity in this optical illusion is

இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் படத்தை பார்த்தால் அதில் மறைந்திருக்கும் பிரபலம் மைக்கேல் ஜாக்சன் என்பதை நீங்கள் காண்பீர்கள்

இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மேஜிக், இதில் ஒரு 3டி படத்தை மறைக்க புள்ளிகள் மற்றும் கோடுகளின் சுழல்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும், காட்சிப் புதிர் நமது மூளை தகவல்களைச் செயலாக்கும் விதத்தில் உள்ளது என்றும் லண்டனின் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தின் உளவியலாளரும் மனித உணர்வு நிபுணருமான டாக்டர் குஸ்டாவ் குன், கூறியுள்ளார்

அதேபோல் இந்த படத்தை மற்றொரு ஆப்டிக்கல் இல்யூஷன் சார்த்த அதே புள்ளிகள் அடிப்படையிலான புகைப்படத்தை ஒப்பிட்டுள்ளார். இந்த படத்தில், உள்ள புள்ளிகளுக்கு இடையில் ஒரு பாண்டாவின் உருவம் மறைந்திருக்கிறது. நமது கண்கள் ஏராளமான குழப்பமான உணர்ச்சித் தகவல்களைக் உள்ளடக்கியது. மேலும் நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த தகவலை தெளிவுபடுத்துவதற்கும் நமது மூளை புத்திசாலித்தனமான தந்திரங்களைப் பயன்படுத்துகிறது" என்று டாக்டர் குஹ்ன் கூறியுள்ளார்.

Optical illusion

"நீங்கள் பார்ப்பது, ஒரு சிறிய யூகத்துடன் கலந்த, பெரிய அளவிலான நரம்பியல் கணக்கீட்டின் முடிவுகள் என்று கூறுகிறார். உதாரணமாக, நீங்கள் ஒரு மரக் கூட்டத்தை உற்றுப் பார்க்கும்போது, ​​​​அதை நீங்கள் காடு அல்லது மரம் என்று விளக்கலாம். நீங்கள் பார்க்கும் காட்சியின் எந்தப் பகுதியில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும். ஆனால் பாண்டா படத்தில் நீங்கள் எந்த அளவில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் ஒரு சில கோடுகளைக் பார்த்து பாண்டாவை அடையாளம் காண முடியும்.

பாண்டா படம் உங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடஞ்சார்ந்த அதிர்வெண்ணைக் கொண்டுள்ளது," படம் உங்களுக்கு நெருக்கமாக இருந்தால் இடஞ்சார்ந்த அதிர்வெண் குறையும். சுருக்கமாக, உங்கள் கண்ணின் பின்புறத்தின் ஒளி-உணர்திறன் பகுதியில் விழும் அதிகமான கருப்பு மற்றும் வெள்ளை கோடுகள் உள்ளன இவைதான் பாண்டா மாதிரியான இல்யூஷன் புகைப்படங்களை தெளிவாக பார்க்க உதவுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment