Advertisment

அரிதான நோய் சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட இப்படி ஒரு முடிவா? “அந்த மனசு இருக்கே சார்” - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

ஆரம்பத்தில் 3637 மீட்டர் உயரத்தில் இந்த சாதனையை நிகழ்த்துவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் கூட பலூன் மிகவும் உயரத்தில் பறந்து 4000 மீட்டரை கடந்து பயணித்துவிட்டது என்று கூறுகிறார் ரெமி.

author-image
WebDesk
New Update
Remi Ouvrard, hot air balloon, viral video, trending viral videos

Frenchman breaks world record for standing on hot-air balloon : ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி ஔரர்ட். மிகப்பெரிய ஹாட் பலூன்களில் பயணம் செய்யும் சாகச வீரர். மேற்கு பிரான்ஸில் டெலித்தான் என்ற பிரச்சாரம் மூலமாக அரிதான நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நிதியை திரட்டும் பொருட்டு, 4016 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த பலூனின் மீது ஏறி நின்று சாதனை புரிந்துள்ளார்.

Advertisment

2019ம் ஆண்டு இவர் நிகழ்த்திய சாதனையை இவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சாகசத்தை வீடியோவில் பார்த்த பொதுமக்கள் பிரம்மிப்பில் ஆழ்ந்துவிட்டனர். ஆரம்பத்தில் 3637 மீட்டர் உயரத்தில் இந்த சாதனையை நிகழ்த்துவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் கூட பலூன் மிகவும் உயரத்தில் பறந்து 4000 மீட்டரை கடந்து பயணித்துவிட்டது என்று கூறுகிறார் ரெமி.

தன்னுடைய தந்தை ஹாட் பலூனை இயக்க, 3000 மீட்டருக்கு மேலே சென்ற பிறகு பலூனில் ஏற துவங்கினார் ரெமி. மேலே செல்ல செல்ல காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்று தன்னுடைய தந்தை கூறியதாக கூறிய ரெமி, பலூனில் ஏறி நின்ற பிறகு எந்த விதமான அசௌகரியங்களையும் உணரவில்லை என்றும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment