தேர்வெழுத சென்ற இளம்பெண்... தாயாக மாறிய தெலுங்கானா போலீஸ்! வைரல் புகைப்படம்!

தெலுங்கானா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தேர்வு எழுத சென்றிருந்தபோது, போலீஸ் ஒருவர் அப்பெண்ணின் குழந்தையை பார்த்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.

பொதுவாக திருமணமான பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் கல்வியையும் சமமாக பார்த்துக் கொள்வதில் கடினம் ஏற்படும். அதிலும் பிறந்த குழந்தை ஒன்று கையில் இருந்தால், கல்வி மிகப் பெரிய சவாலாகவே மாறிவிடும். அத்தகைய சூழல் ஒன்று தெலுங்கானாவில் நேர்ந்தது.

தெலுங்கானா போலீஸ் தாய் உள்ளம் :

தெலுங்கானா மஹபூப்நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தேர்வெழுத வந்திருந்தார். ஆனால் கையில், புதிதாக பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை வைத்துகொண்டு தவித்து வந்தார். இதை பார்த்த காவல்துறை, குழந்தையை தன் கையில் வாங்கிகொண்டு, இளம் தாயை தேர்வு அறைக்கு அனுப்பினார்.

அந்த தாய் உள்ளே தேர்வெழுதும் வேளையில், குழந்தை அழ ஆரம்பித்ததால், அக்குழந்தையை சமாதனப்படுத்தி அந்த தாய் வெளியே வரும் வரை பார்த்துகொண்டார். இந்த புகைப்படம் இணையதளம் முழுவதும் வைரலாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த ரேமா ராஜேஸ்வரி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அந்த காவலரின் அடையாளத்தை வெளியிட்டார். அதில், குழந்தையை பார்த்துக்கொண்ட காவலர், மூசாபேட் காவல்நிலையத்தின் தலைமை கான்ஸ்டபில் முஜீர் உர் ரெஹ்மான் என்ற தெரியவந்தது. இவருக்கு இணையதளம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close