சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐ.பி.எல் போடிகளில் கலக்கி வரும் எம்.எஸ். தோனி, 41 வயதானாலும் இன்னும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். இந்த ஐ.பி.எல் தொடரோடு தோனி ஓய்வை அறிவிப்பாரோ என்று ரசிகர்கள் பீதியில் உள்ளனர். சென்னை அணியின் ரசிகர்கள் தோனியை தல தோனி என்று அன்புடன் அழைக்கிறார்கள்.
தல தோனி பற்றியும் கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை வெற்றி பெற்றது குறித்தும் ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல் 16-வது சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி, மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதில் காலில் காயமடைந்தும், மைதானம் முழுக்க நடந்து வந்தார். இதனை பத்துதல படத்தில் சிம்புவை பார்த்து நன்றி சொல்லும் மக்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் மிரட்டலான மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் பெரிய அளவில் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. கே.கே.ஆர் அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை, ‘ரெண்டு’ படத்தில் வடிவேலு, “எங்கம்மா நம்ம ஆட்டோக்கார தம்பி” என்று ஒரு வசனம் செல்லுவார். அதை, வடிவேலுவாக சுனில் நரைனை மாற்றி, ஃபார்ம்-க்கு வரணுமே.. எங்க நம்ம ஆட்டோக்கார தம்பி என்று தேடுவது போலவும், ஆட்டோக்கார தம்பியாக சென்னை அணியை மாற்றி மீம்ஸ் போட்டுள்ளனர்.

சென்னை அணியின் பேட்ஸ்மேன் மொத்தமாக சொதப்பிய நிலையில், இளம் வீரர் சிவம் துபே மட்டும் 34 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். நடப்பு சீசனில் மட்டும் 363 ரன்களை குவித்துள்ளார். இவரை பாராட்டும் வகையில் 83 படத்தில் ஸ்ரீகாந்த் பேசும், “எனக்கு இந்த டொக்கு டொக்கு பேட்டிங்லாம் வராது.. டிஃபென்ஸ்லாம் ஆட தெரியாது” என்று ஒரு வசனம் சொல்லுவார். அதனை மாற்றி சிவம் துபேவாக மாற்றி, The Man, The Myth and The Legend என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சரவெடி.

நேற்றைய போட்டியில் கே.கே.ஆர் அணியின் ரிங்கு சிங் 43 பந்துகளில் 54 ரன்கள் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். நடப்பு சீசனில் மட்டும் 407 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இவரை புஷ்பாவாக மாற்றி, “இங்க நான் ரூல் பண்ணதான் வந்துருக்கேன். அத யாராலும் மாற்ற முடியாது” என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவலில் இருக்கிறது.

நேற்றையப் போட்டி முடிவடைந்த பின் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது சட்டையில் தல தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார். இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதனை இளையராஜாவே ஏஆர் ரஹ்மானிடம் வந்து ஆட்டோகிராஃப் போன்ற நிகழ்வு என்று உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் மிகவும் உணர்வுப் பூர்வமாக இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“