தோனி மகள் ஜிவாவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ள திருவாங்கூர் தேவஸ்தானம்!

கோயில் திருவிழாவின் போது தோனி மகள் ஜிவாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

By: October 28, 2017, 1:36:13 PM

தோனியின் செல்ல மகள் ஜிவா தோனி பாடிய மலையாள பக்தி பாடல் ஒன்று, சமீபத்தில் சமூக தளங்களில் வைரல் ஆனது. மலையாளத்தில் 1992-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘அத்வைதம்’ எனும் படத்தில், கிருஷ்ண பரமாத்மாவின் புகழ் பாடும் பாடல் ஒன்று உள்ளது. அதைத் தான் ஜிவா தோனி பாடியிருந்தார். ஜிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியே அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். வெறும் 15 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்தனர். ‘அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு நீ’ எனத் தொடங்கும் இப்பாடலை பாடகர் என்.பி.குமார் பாடியிருந்தார்.

இந்த நிலையில், ஜிவா பாடிய இப்பாடலால் அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயிலும் உலகளவில் பிரபலமாகி விட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாவின் போது தோனி மகள் ஜிவாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில் குறித்த பாடலை தோனியின் மகள் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், கோயிலும் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. எனவே, ஜனவரி 14-ம் தேதி கோயிலில் நடக்கும் 12 களபம் திருவிழாவின் போது தோனி மகளை அழைத்து கவுரவிக்க தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.

@zivasinghdhoni006 ❤️???? We love you Baby Zivu! ???? @mahi7781 @sakshisingh_r

A post shared by Ziva ❤ (@ziva.dhoni) on

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

Web Title:Thiruvangoor devasthanam committee is all set to invite little ziva to the famed ambalappuzha temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X