இந்த ‘செல்ஃபி’க்கு சுமார் 50,000 ‘ரீட்வீட்’… அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

இங்க ஒரு ஜோடி என்ன மாயாஜாலம் செஞ்சாங்க அப்படீன்னு தெரில. ரீட்வீட், லைக்ஸ் அப்டீன்னு அள்ளுது.

நாட்கள் செல்லச் செல்ல தொழிற்நுட்பமும் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. அப்படி ஒரு வளர்சியில் உருவானது தான் “ஸ்மார்ட் போன்”. சும்மா பாட்டையும், வீடியோவையும் பார்த்துட்டு எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும். இப்போ எல்லாமே “ஸ்மார்ட் போன்” தான். போன் வாங்கும் போது முதல்ல கேக்குற கேள்வி, கேமரா நல்லா இருக்குமா? அப்படின்னு தான். அந்த அளவுக்கு ‘செல்ஃபி’ முக்கியமா இருக்கு இந்த காலத்துல.

‘செல்ஃபி’ல முகம் பளிச்சுன்னு இருக்கனும் அப்படீன்னு பல்வேறு எடிட்டிங் ஆப்ஸ்-ம் யூஸ் பண்றாங்க. இதெல்லாம், இருக்கட்டும் விஷயத்துக்கு போவாம் வாங்க. சோஷியல் மீடியால ஒரு போட்டாவ போட்டதும் லைக்ஸ் சும்மா எகிறனும். அதுக்கு என்ன மாயாஜால வேலையெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையும் சிலர் செஞ்சுருவாங்க.

ஆனா, இங்க ஒரு ஜோடி என்ன மாயாஜாலம் செஞ்சாங்க அப்படீன்னு தெரில. ரீட்வீட், லைக்ஸ் அப்டீன்னு அள்ளுது. இந்த போட்டோவ பாத்ததும் இதுல என்னடா வித்தியாசம், என்ன வழக்கமா இருக்குற மாதிரி தான இருக்கு, அப்படீன்னு நீங்க நினைக்குறது புரியுது.

ஆனா, நீங்க நல்லா பாத்தா தான் தெரியும், அந்த ஜோடிக்கு பின்ன இருக்க கண்ணாடியில. பாத்துட்டீங்களா? அந்த இளைஞரின் தலை, பின்புறம் தான் கண்ணாடில தெரியுது. ஆனா, இந்த போட்டோவுல அந்த பெண்ணோட முகம் தெரியுது, பாத்தீங்களா! அது தான் இந்த செல்ஃபி’யோட ஸ்பெஷல்.

சோஷியல் மீடியாவுல பதிவிடப்பட்ட இந்த ‘செல்ஃபி’க்கு லைக்ஸ் சும்மா அள்ளிக்கிட்டு வருது. இந்த ‘செல்ஃபி’ய ஆன்டி என்பவர் ட்வீட்டியுள்ளார். அந்த ட்வீட் இப்போ 50,000 ரீட்வீட்டை நெருங்கிவிட்டது.

 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This cute couple selfie is actually freaking everyone out can you figure out why

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com