Advertisment

”பெண்களே! உங்கள் கனவுகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், ஏனெனில் நீங்கள் அதற்கு தகுதியானவர்கள்”

பிரபல நடிகை கொங்கனா சென் ஆண்களின் கனவுகளுக்கும், பெண்களின் கனவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார். நிச்சயம் அந்த வீடியோவை பார்க்க வேண்டும்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
”பெண்களே! உங்கள் கனவுகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், ஏனெனில் நீங்கள் அதற்கு தகுதியானவர்கள்”

இந்தியா சுதந்திரம் பெற்றும் 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் ஆண்களின் கனவுகளுக்கும், பெண்களின் கனவுகளுக்கும் உருவாக்கியுள்ள வேறுபாடுகளை களைந்தபாடில்லை. “இப்பல்லாம் என்னங்க எல்லா துறையிலும் பெண்கள் தான் இருக்கிறார்கள். நிறைய படிக்கிறாங்க”, என்ற பேச்சுக்கள் பொதுப்படையாக வேண்டுமானால் இருக்கலாம். ஏன் இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், “பெண்கள் நிறைய பேர் வேலைக்கு வந்துவிட்டதால், ஆண்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டன”, என்று கூட கருத்து கூறுகிறார்கள். ஆனால், ஒரு பெண் படித்து, அவள் நினைத்த கனவுகளை அடைய இன்றளவும் ஆண்களை விட பல சிரமங்களையும், கடினங்களையும் எதிர்கொள்கிறாள் என்பதை நிச்சயம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

Advertisment

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் #FundYourOwnWorth பிரச்சாரத்திற்காக 2 நிமிட வீடியோ வெளியிடப்பட்டது. அதில், பிரபல நடிகை கொங்கனா சென் ஆண்களின் கனவுகளுக்கும், பெண்களின் கனவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார். அதைப்பார்த்தால் ‘உண்மைதான்’ என நாம் எல்லோரும் சொல்லிக் கொள்ளக்கூடும்.

அதில், “நேரத்தை பணத்துடன் ஒப்பிடுகிறார்கள். அப்படியென்றால் வாழ்க்கையை வங்கி கணக்கு என நினைத்துக் கொள்வோம். அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஆண்கள் எப்படி செலவிடுகின்றனர்? கல்வி, உயர்கல்வி (வெளிநாட்டில் எம்.பி.ஏ.பட்டம், “ஃபாரின் ரிட்டர்ன் என்ற டேக் அவர்களுக்கு தேவைப்படுகிறது), காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே செய்ய வேண்டிய வேலை, மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை பொழுதுபோக்கு, வார விடுமுறையில் நண்பர்களுடன் களிப்பு, குடும்பத்திற்கான நேரம்”, என ஆண்களுக்கான கனவுகள் குறித்து கொங்கனா சென் விளக்குகிறார்.

அடுத்து பெண்களின் கனவுகள் குறித்து பேசுகிறார். “தொடக்கக் கல்வி, ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்ப்பதில் முழுநேரத்தையும் செலவிட வேண்டும். சமையல், பெரியவர்களை கவனித்துக் கொள்ளுதல், அதிலேயே அவர்களுக்கு எல்லா நேரமும் முடிந்துவிடுகிறது”, என நிதர்சனத்தை தெரியப்படுத்துகிறார்.

அதன்பிறகு, “பெண்களின் லட்சியங்கள், கனவுகள் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது. பெண்களே! உங்களுடைய கனவுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இதனை செய்யாவிட்டால், யார் செய்வார்கள்?”, என கேள்வி எழுப்புகிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment