Viral Video : எத்தனை விலங்குகள் வந்தாலும் யானை போன்ற ஒரு கியூட் விலங்கை பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
Advertisment
அவை செய்யும் சேட்டைகளும், குறும்புகளும் நம்மை பல நேரங்களில் சிரிக்க வைக்கும். இது வரை சமூக வலைத்தளங்களில் யானை மற்றும் குட்டிகளின் பல வீடியோக்கள் வைரலாகி நெட்டிசன்களை மகிழ்வித்தது.
ஆனால், இந்த வருடத்தின் முதல் க்யூட் யானை வீடியோ இது தான். தாய்லாந்து நாட்டில் உள்ள சியாங்க் மாய் என்ற யானைகள் காப்பகம் ஒன்றில் வளர்ந்து வருகிறது ஒரு வயது யானை. அந்த காப்பகத்தில் இருக்கும் எல்லாருக்குமே இந்த யானை தான் ஃபேவரைட் என்றால் இந்த யானைக்கும் காப்பகத்தை பராமரிக்கும் எல்லோருமே ஃபேவரைட் தான்.
Viral Video : தாய்லாந்து யானை வைரல் வீடியோ
சும்மா போகிறவர்களிடம் கூட ஏதேனும் சேட்டைகளை செய்து அவர்களை சிரிக்க வைக்கும். குழந்தைகள் போலவே இந்த யானையும் அதிக அளவில் குறும்புகள் செய்வதாகவும், எப்போதும் எதாவது சேட்டையை செய்துக் கொண்டே இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு எல்லோரையும் தனது கியூட்னஸ் மூலம் தன் வசமாக்கிய ஒரு வயது யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே காப்பகத்தில் இருக்கும் ஒருவர் மூங்கில் வேலிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்க, யானைக்கோ அவருடன் விளையாட வேண்டும் என்ற பிடிவாதம் வந்துவிட்டது. உடனே வேலி வழியாக தும்பிக்கையை வைத்து அவரை “வா விளையாடலாம் வா....” என வற்புறுத்தி கூப்பிடுவது போல் இழுக்கிறது.
ஒரு கட்டத்தில் அவர் கண்டுக் கொள்ளாமல் இருக்க, வேலி மீது ஏரி வரியா இல்லையா என்பது போல் அவரை தும்பிக்கையால் ஒரு போடு போடுகிறது.
இந்த சேட்டை யானையின் வீடியோ தான் இன்றை சமூக வலைத்தளத்தின் வைரல்.