Advertisment

ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கும் மலாலா? சமூக வலைத்தளங்களில் பெருகும் எதிர்ப்பும் ஆதரவும்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மலாலா யூசுஃப்சாய், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேல் கோட் அணிந்தபடி தோன்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Malala Yousafzai, england, oxford university,

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மலாலா யூசுஃப்சாய், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேல் கோட் அணிந்தபடி தோன்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

பாகிஸ்தானில் கல்வி உரிமைக்காக போராடி, தாலிபான்களால் சுடப்பட்டு மரணத்தின் எல்லைக்கே சென்று மீண்டவர் மலாலா. இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெருமையும் இவரையே சாரும். மேலும், ஐநாவுக்கான அமைதி தூதுவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மலாலா தற்போது, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் பிரிவுகளில் படிக்க தேர்வாகியுள்ளார். சமீபத்தில் தன் கல்லூரி வாழ்க்கையில் முதல் நாள் என அவர் தன்னுடைய நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கிய புத்தகத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில், அவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேல் கோட் அணிந்தபடி தோன்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது மலாலாவா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் Siasat.pk என்ற பாகிஸ்தானிய ஃபேஸ்புக் பக்கத்தில்தான் முதலில் பகிரப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தது தவறு என்னும் ரீதியில், பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆபாச நடிகை மியா காலிஃபாவுடன் மலாலாவை சிலர் ஒப்பிட்டுள்ளனர். அதே சமயத்தில், மலாலாவுக்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகள் உட்பட அனைவருமே தாங்கள் அணியும் உடைகளின் பெயரால் சமூக வலைத்தளங்களில் தாக்கப்பட்டு வருகின்றனர். உடை அணிவது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதைக்கூட பெரும்பான்மை சமூகம் இன்னும் உணரவில்லை என்பதையே இத்தகைய தாக்குதல்கள் நிரூபிக்கின்றன.

England Malala Yousafzai Oxford University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment