Advertisment

ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இந்த பெண் கடைசியாக அனுப்பிய அசத்தல் மெசேஜை படியுங்கள்

இம்மாதிரியான விஷயங்களால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பெண் ஒருவர் தன்னுடைய ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இந்த பெண் கடைசியாக அனுப்பிய அசத்தல் மெசேஜை படியுங்கள்

வாட்ஸ் ஆப்பில் நாம் விரும்பியும், விரும்பாமலும் ஒரு விஷயத்தில் மட்டும் நீடித்திருப்போம். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. நம்முடைய உறவினர்கள் எல்லோரும் அடங்கியிருக்கும் வாட்ஸ் ஆப் ஃபேமிலி க்ரூப். அந்த க்ரூப்பில் அதிகபட்சம் அனைவரும் என்ன பகிர்வார்கள் என உங்களுக்கு தெரியும்தானே. ’ஹாய்’, ‘குட் மார்னிங்’, ‘எல்லோரும் சாப்பிட்டீங்களா?’, பெரும்பாலும் இந்த மாதிரியான தகவல்களைத்தான் அந்த க்ரூப்பில் பரிமாறிக்கொள்வோம். இதுதவிர, சரிபார்க்கப்படாத தகவல்கள், தேவையில்லாத வீடியோக்கள், கணவன் - மனைவி ஜோக்குகள் என தேவையில்லாத விஷயங்கள்தான் அதிலிருக்கும்.

Advertisment

இம்மாதிரியான விஷயங்களால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பெண் ஒருவர் தன்னுடைய ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணத்தை நீங்கள் கேட்டால், உங்களுடைய ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பிலிருந்து இந்த நொடியே வெளியேறிவிடுவீர்கள்.

நமா என்ற பெண், தன்னுடைய ஃபேமிலி க்ரூப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன், அதிலிருந்து வெளியாவதற்கான காரணத்தையும் பகிர்ந்தார். அந்த மெசேஜின் ஸ்க்ரீன் ஷாட்டை அப்பெண் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பது,

“முதலில் இந்த க்ரூப்பில் நான் ஆக்டிவாக இல்லாததற்கு மன்னித்துவிடுங்கள். அதற்கான காரணம், உண்மை தன்மை இல்லாத செய்திகள், பாலின வேறுபாட்டை வெளிப்படுத்தும் தகவல்கள், அறியாதவர் மீதான முன்முடிவுகள், ஆகியவைதான் இந்த க்ரூப்பில் அதிகம் பகிரப்படுகின்றன. இது எனக்கு அசௌகரியமாக உள்ளது. நகைச்சுவையாக நினைத்து இங்கு பகிரப்படும் அனைத்தும், பல பிரச்சனைகளில் உணர்வுப்பூர்வமற்றதாக மாற்றுகிறது.

உணர்வு, சமூக நீதி இவற்றிலெல்லாம் அதிக நம்பிக்கை கொண்டுள்ள நான், இங்கு பகிரப்படுபவை குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றால், அது என்னுடைய நம்பிக்கைக்கு நான் இழைக்கும் துரோகம்.

உங்களை மாற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இப்படி வேறுபட்ட கோணத்தில் சிந்திப்பது நான் மட்டுமே என நினைக்கிறேன். அதனால், இந்த க்ரூப்பிலிருந்து வெளியேற அனுமதியுங்கள். உங்கள் அனைவரது மீதும் அன்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு நீங்கள் மெசேஜ் அனுப்பலாம்.”, என குறிப்பிட்டிருந்தார்.

அவரது முடிவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

என்ன, உங்கள் வாட்ஸ் ஆப் க்ரூப்பிலும் இவையெல்லாம் தானே அதிகம் இருக்கின்றன?

Whatsapp Social Websites
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment