ரயிலுக்காகக் 'காத்திருக்கும்' பணகுடி கிராமம்! பெயர் பலகைக்கு பூ, பொட்டு வைத்து நூதன போராட்டம்

ரயில்கள் நிற்காததால் ஆத்திரமடைந்த பணகுடி கிராம மக்கள், ரயில் நிலையத்தின் பெயர் பலகைக்கு பூ, பொட்டு வைத்து, சூடம் ஏற்றி, குடில் அமைத்து நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

ரயில்கள் நிற்காததால் ஆத்திரமடைந்த பணகுடி கிராம மக்கள், ரயில் நிலையத்தின் பெயர் பலகைக்கு பூ, பொட்டு வைத்து, சூடம் ஏற்றி, குடில் அமைத்து நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

author-image
abhisudha
New Update
Tirunelveli Panagudi railway station Nellai train stop protest Nellai rail route

Tirunelveli Panagudi railway station| Nellai train stop protest

திருநெல்வேலி மாவட்டத்தின் பணகுடி ரயில் நிலையத்தில். கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு வரை நின்று சென்ற ஒரு ரயில் கூட தற்போது நிற்பதில்லை. மக்களின் போக்குவரத்துத் தேவைக்காகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ரயில் நிலையம், இன்று 'பயன்பாடற்ற' நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

Advertisment

கடவுள் தலையிட வேண்டும்: நூதனப் பிரார்த்தனை!

ரயில்கள் நிற்காததால் ஆத்திரமடைந்த பணகுடி கிராம மக்கள் ரயில் நிலையத்தின் பெயர் பலகைக்கு பூ, பொட்டு வைத்து, சூடம் ஏற்றி நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான சி. ஜெயராஜ் என்பவர் பேசியதாவது:

"அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் சி. ஜெயராஜ். என் ஊர் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி. எங்க ஊர்ல பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மிக பிரம்மாண்டமான ரயில் நிலையம் இருக்கு. ஆனா அந்த ரயில் நிலையத்தில, கொரோனா காலத்துக்கு முன்ன நின்ன ரயில் கூட இப்ப நிக்க மாட்டேங்குது.

Advertisment
Advertisements

நமது தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த அதிகாரிகளும் ரயில் நிற்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அமைச்சர், பிரதமர் என உயர் மட்டத்தில் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அதனால, வேற யார்கிட்ட போய் கோரிக்கை வைக்கணும்னு எங்களுக்குத் தெரியலை. அதனாலதான், நாங்க கடவுளைப் பிரார்த்தனை பண்றோம். அரசு ரயிலை இந்த ஸ்டேஷன்ல நிக்க வைக்கும்படி கடவுள் அதிகாரிகளுக்கு நினைவூட்ட வேண்டும்." என்றார்.

தங்கள் பாரம்பரிய ரயில் நிலையத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்ற மக்களின் நூதனப் போராட்டத்திற்குப் பிறகாவது, ரயில்வே நிர்வாகம் செவிசாய்த்து ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: