உலக அளவில் தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்: என்ன நடந்தது ட்விட்டரில்???

அவரின் வருகைக்கு எழுந்த எதிர்ப்பு தற்போது வரை சமூகவலைத்தளங்களில் ஓயவில்லை.

இன்றைய தினம் ட்விட்டர் வலைப்பக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு. உலகளவில் தமிழர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.  சென்னை வந்த மோடியை எதிர்த்து கருப்பு கொடி போராட்டம் ஒரு பக்கம் நடக்க, மறு பக்கம் ட்விட்டரில்   என்ற ஹாஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் அடித்தது.

ஏப்ரல் 12 ஆம் தேதி  இந்திய நாட்டின் பிரதமர் மோடி,  சென்னைன் வருகிறார் என்ற தகவல் வெளியான  நாளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.  எற்கனேவே,  மோடியின் வருகை அன்று கருப்புக்கொடி  போராட்டம் நடத்தப்படும் என்று  அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சில தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்புகளை தாண்டியும் மோடி சென்னை வந்து சென்றார். இருந்த போது அவரின் வருகைக்கு எழுந்த எதிர்ப்பு தற்போது வரை சமூகவலைத்தளங்களில் ஓயவில்லை.

1. 

பதற்றமான சூழல்களை மீறி இன்று தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்து சென்றார். அவரின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டியும், ‘திரும்பிப் போ மோடி’ என்ற முழக்கங்கள் எழுப்பியும் போராட்டம் நடைபெற்றது. அதே போல் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில்    என்ற ஹாஷ்டேக் உலகளவில் ட்ரெர்ண்ட் ஆனது.

இதற்கு ஆதரவு தெரிவித்தும்,  எதிர்ப்பு தெரிவித்து பிரபலங்கள் சிலர்  ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.  காவிரி மேலாண்மை வாரியம்  தமிழகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது இப்போதாவது மோடிக்கு தெரிந்திருக்கும் என்று போராட்டக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மோடியின் அரசியல் பயணத்தில்,  இந்த    மறக்க முடியாத ஒரு நாளாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

 

 

2. ????????

 

-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார்,  தென்னாப்பிரிக்க வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

 

3. ,

காஷ்மீரில் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி அசிஃபாவிற்கு நியாம் கிடைக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் மற்றும்  பிரபலங்கள் சிலர்  தங்களின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும்  இந்த சிறுமிக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close