சிங்கிள்ஸ் கொண்டாடிய ஹக் டே!.... இணையத்தை தெறிக்க விடும் காதலர் தின கலக்கல் மீம்ஸ்கள்.

ஹக் டேவில் இணையத்தை கலக்கிய அனைத்து மீம்ஸ்களும் வைரல் ரகம் தான்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் எப்பவுமே கெத்து காட்டும் சிங்கிள்ஸ், காதலர்கள் கொண்டாடிய ’ஹக் டே’வை மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் காதலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது இது முற்றிலுமாக மாறி வருகிறது. காதலர்கள் பொது இடங்களில் நடந்துக் கொள்வது, வெளியில் செல்வது, பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வது என அவர்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கும் இளைஞர்கள் பலர், சமூகவலைத்தளங்களில் அதை மீம்ஸ்களாக போட்டு கலாய்து விடுகின்றன.

இதில் காதலிக்கும் அவர்களின் நண்பர்களும் விட்டு வைக்கப்படுவதில்லை என்பது 100 சதவீத உண்மை.இந்த மீம்ஸ்களுக்கு அனைத்து காதலர்களின் பதிலும் ஒன்று தான். சிங்கிளாக இருப்பவர்கள் பொறாமையில் செய்யும் வேலைதான் இந்த மீம்ஸ்கள் என்பது அவர்களின் தரப்பு குற்றச்சாட்டு. பொதுவாகவே, காதலர்கள் தினத்திற்கு முன்பு வரும் 7 நாட்களும் விதவிதமாக பெயர் சூட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ப்ரோபசல் டே, ஹக் டே என ஒவ்வொரு பெயரில் இன்றைய காதலர்கள் அதை கொண்டாடி வருகின்றன. இதைப் பார்த்து லைட்டாக எரிச்சல் அடையும் சிங்கிள்ஸ் அல்லது, எங்க போனாலும் இவங்க தொல்லை தாங்கலப்பா… கடும்பேத்துராங்க லாட் என புலம்பி தள்ளும் அப்பாவி இளைஞர்கள் தங்களின் கோபங்களை மீம்ஸ்களாக போட்டு சந்தோஷம் காண்கின்றன. அந்த வகையில் ஹக் டே கொண்டாடும் மோடி, ஃபோனுடன் ஹக் டே கொண்டாடும் தவளை என ஹக் டேவில் இணையத்தை கலக்கிய  அனைத்து மீம்ஸ்களும் வைரல் ரகம் தான்.

 

×Close
×Close