விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி சண்டை போடும் சிறுத்தைகள்: மெய் சிலிர்க்கும் வீடியோ - Two Leopards fighting on Coconut tree video goes viral | Indian Express Tamil

விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி சண்டை போடும் சிறுத்தைகள்: மெய் சிலிர்க்கும் வீடியோ

இரண்டு சிறுத்தைகள் விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி சண்டையிடும் வீடியோவை முடியும் வரைப் பாருங்கள். நிச்சயமாக மிரண்டு போவீர்கள்.

விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி சண்டை போடும் சிறுத்தைகள்: மெய் சிலிர்க்கும் வீடியோ

இரண்டு சிறுத்தைகள் தரையில் சண்டையிட்டாலே பார்க்க பயங்கரமாக இருக்கும். அதிலும், இரண்டு சிறுத்தைகள் விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி ஆக்ரோஷமாக சண்டையிட்டால் எப்படி இருக்கும்? இரண்டு சிறுத்தைகள் உயரமான தென்னை மரத்தில் ஏறி சண்டையிடும் மெய்சிலிர்க்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு எப்போதும் ஒரு பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் டிஸ்கவரி, நேஷ்னல் ஜியோகிராஃபி, சேனல்கள் பிராந்திய மொழிகளில்கூட பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில், வேட்டை விலங்குகள் இரண்டு சண்டையிடுகிற வீடியோ என்பது பார்ப்பதற்கு அரிதாக கிடைக்கும். அதிலும் தரையில் சண்டையிடமால் உயரமான தென்னை மரத்தில் ஏறி இரண்டு சிறுத்தைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை மெய்லிர்க்க வைத்து வருகிறது.

சுசந்தா நந்தா என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஒரு வய்ல் பகுதியில் உள்ள உயரமான தென்னை மரத்தில் ஒரு சிறுத்தை மேலே ஏறுவதும் இறங்க்குவதுமாக இருக்கிறது. திடீரென மேலே ஏறுகிறது. அப்போதுதான் நடக்கிறது அந்த மிரட்சியான காட்சி. திடீரென இன்னொரு சிறுத்தை வேகமாக விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி, ஏற்கெனவே மேலே உள்ள சிறுத்தையுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுகிறது. இரண்டு சிறுத்தைகளின் பயங்கர சண்டையில் தென்னை மரமே ஆட்டம் கண்டு கொந்தளிக்கிறது. கடைசியில், ஒரு சிறுத்தை பின்வாங்கி கீழே இறங்குகிறது.

காஞ்சனா படத்தில், பேயுக்கும் பேயுக்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குதாம் என்று ஒரு வசனம் வரும். அது போல சிறுத்தைக்கும் சிறுத்தைக்கும் தென்னை மரத்தில் நடந்த பயங்கர சண்டையின் மெய்சிலிர்க்கும் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி, சுசந்தா நந்தா, இந்த சிறுத்தை ஏன் தென்னை மரம் ஏறுகிறது என்று நீங்கள் ஆச்சரியத்துடன் யோசிக்கலாம். வீடியோ முடியும் வரை பாருங்கள் என்று கூறுகிறார்.

இரண்டு சிறுத்தைகள் விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறி சண்டையிடும் வீடியோவை முடியும் வரைப் பாருங்கள். நிச்சயமாக மிரண்டு போவீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Two leopards fighting on coconut tree video goes viral