Advertisment

கருப்பு சட்டையில் தாத்தா பேரன் உரையாடல் : நெகிழ்ச்சி வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udhayanidhi with karunanidhi

நடிகர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் சென்று தனது தாத்தா கருணாநிதியுடன் உரையாடிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

காவிரி விவகாரத்தில் மோடியின் தமிழகம் வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி காட்டியும், கருப்பு ஆடை அணிந்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக-வை சேர்ந்த அனைவரும் கருப்பு ஆடை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் 6வது நாளாக இன்று திருவாரூரில் ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்விற்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் செல்ல உள்ளார்.

இது குறித்து இன்று கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்து பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தாத்தா பேரன் உரையாடுவது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Udhayanidhi Stalin Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment