தலைக்கு “தில்ல பாத்தியா”; வேலை தேடணும்னா இப்படி தேடணும்!
ஒரு விண்ணப்பத்தோடு முடியுறதுக்கு எதுக்கு லிங்க்டின் ப்ரோஃபைலை 500 பிரிண்ட் எடுத்துட்டு பார்க்கிங் லாட்ல கார்களில் வைக்கணும்னு நீங்க கேள்வி கேக்கலாம். ஆனாலும் பாருங்க, தனித்துவமா அவர் தெரிஞ்சனால தான் அவரை அந்த நிறுவனம் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக வேலைக்கு எடுத்துள்ளது.
UK man puts flyers with LinkedIn profile on cars :
Advertisment
ஒரு வேலைல போய் சேரணும்னா நீங்க எப்படி வேலைக்கு அப்ளே பண்ணுவீங்க…. ரெசியூம் டைப் பண்ணுவீங்க, நீங்க சேர விரும்புற நிறுவனத்துக்கு மெய்ல் அனுப்புவீங்க, இல்ல அவங்க உங்களுக்கு ஏதாவது ஆன்லைன் விண்ணப்பப் படிவம் ஏதாவது கொடுத்தா அத பூர்த்தி செய்விங்க. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஜோனத்தன் ஷிஃப்ட் ஒருவர் செய்த விநோத மார்க்கெட்டிங் ஐடியா அவருக்கு ஒரு வேலையை உறுதி செய்துள்ளது.
மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிய அவர் தன்னுடைய ரெசியூமிற்கு பதிலாக பெயர், புகைப்படம், தன்னுடைய லிங்க்டின் ப்ரோஃபைலுக்கான க்யூ.ஆர்.கோட் ஆகியவற்றை ப்ரிண்ட் எடுத்து அவர் வேலைக்கு சேர விரும்பிய நிறுவனத்தின் கார் பார்க்கிங்கிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற அவர் அங்குள்ள அனைத்து கார்களின் முகப்பிலும் அந்த லிங்க்டின் ப்ரோஃபைல் ப்ரிண்ட் அவுட்டுகளை வைத்துச் சென்றுள்ளார். இது அங்குள்ள அநேக நபர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறுது நாட்களிலேயே அந்த நபர் அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாண்ட் ப்ரிடிண்ட்யூகே என்ற அந்த நிறுவனத்தின் மேனேஜர், ஜோனத்தன் ஷிஃப்ட் எவ்வாறு தன்னுடைய ப்ரோஃபைலை அங்கே உள்ள கார்களில் வைத்துக் கொண்டிருந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
ஒரு விண்ணப்பத்தோடு முடியுறதுக்கு எதுக்கு லிங்க்டின் ப்ரோஃபைலை 500 பிரிண்ட் எடுத்துட்டு பார்க்கிங் லாட்ல கார்களில் வைக்கணும்னு நீங்க கேள்வி கேக்கலாம். ஆனாலும் பாருங்க, தனித்துவமா அவர் தெரிஞ்சனால தான் அவரை அந்த நிறுவனம் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக வேலைக்கு எடுத்துள்ளது. இந்த வீடியோ மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil