பிரம்மிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய 50 வயது சுறா! வைரல் வீடியோ

இது தான் மிகப்பெரிய சுறா மீன் என இணையத்தில் வைரல் அடித்து வருகிறது இந்த வீடியோ.

அதிரடி வேட்டையின் மூலமாக உணவை எடுத்துக் கொள்ளும் உயிரினங்களில் சுறாவும் ஒன்று. அந்த வகையில் சுறா மீன்கள் வேட்டையாடும் வீடியோக்கள் பலவற்றை நாம் தொலைக்காட்சிகளில் கண்டிருப்போம். எப்போது தாக்குதல் நடத்தும் என யூகிக்க முடியாத இந்த சுறாக்கள் அபாயகரமானவை.

இந்நிலையில், மிகப்பெரிய சுறா மீன் குறித்து இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தோராயமாக அந்த சுறா மீனின் நீளம் 20அடி என்றும், அது 50 வயது மதிக்கத்தக்கது என்றும் கருதப்படுகிறது.

டிஸ்கவரி சேனலில் பணிபுரியும், மௌரிசியோ ஹோயோஸ் பாடிலா என்பவர் தான் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார். மெக்ஸிகோவில் உள்ள குவாடலூப் தீவில் இந்த அரிய வகை காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை மௌரிசியோ ஹோயோஸ் பாடிலா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

×Close
×Close