/tamil-ie/media/media_files/uploads/2017/11/kidnap_759.jpg)
அமெரிக்காவில் காரில் கடத்தப்பட்ட பெண் ஒருவர், காரின் பின்புறத்திலிருந்து தப்பித்து ஓடும் சிசிடிவி வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, அலபாமா நியூஸ் நெட்வொர்க் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான அலபாமாவில், பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கடத்தியவர் அப்பெண்ணை காரின் பின்புறம் கிடத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், காரை பெட்ரோல் பங்க் ஒன்றில் நிறுத்திவிட்டு, கடத்தியவர் வேறு எங்கோ செல்லவே, அப்பெண் காரின் பின்புறத்திலிருந்து இறங்கி தப்பித்து சென்றிருக்கிறார். இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தையடுத்து, கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 30-ம் தேதி, அந்நபர் கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். ஆனால், அப்பெண் பணம் தரவில்லையென்றதும், அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#CAPTURED: Kidnapping suspect, Timothy Wyatt, is now in police custody. https://t.co/gP95Qvi58zpic.twitter.com/UGDpgJdfrV
— Alabama News Network (@ALNewsNetwork) 1 November 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.