சாகச பயணத்திற்கு முன் சீனாவில் உள்ள இந்த பயங்கர படிக்கட்டுகளில் இறங்கிக் காண்பியுங்கள்

சாகச விரும்பிகள் நிச்சயம் சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள ஹூவாயின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹூவாஷன் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டும்.

சாகச விரும்பிகள் நிச்சயம் சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள ஹூவாயின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹூவாஷன் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டும்.

மலையேற்றம், ட்ரெக்கிங், ஸ்கை டைவிங் என பல சாகச பயணங்கள் உள்ளன. ஆனால், சீனாவில் உள்ள இந்த மலைப்பகுதியில் 7,069 அடி உயரத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகளில் இருந்து இறங்குவது உண்மையிலேயே வேறுவித அனுபவத்தைத் தரக்கூடிய சாகச பயணம். இந்த பயணம் மிகவும் ஆபத்தான சாகச பயணமாக கருதப்படுகிறது.

அந்த ஆபத்தான படிக்கட்டுகளில் ஒரு பெண் உட்பட சில சாகச வீரர்கள் இறங்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அந்தப் பெண் இருபக்கங்களிலும் எப்பொழுது அறுந்துவிழும் என தீர்மானிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட இரும்புச் சங்கிலிகளை பிடித்துக்கொண்டு, அந்த செங்குத்தான படிக்கட்டுகளில் இறங்குகிறார். அங்கிருந்து கீழே பார்த்தால் மூச்சடைக்கும் வகையிலான பள்ளத்தாக்கு.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கிலான சாகச வீரர்கள் இந்த பயணத்தை ஏற்கொள்கின்றனர். சீனாவுக்கு செல்ல ஆயத்தமாகிவிட்டீர்களா? இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.

×Close
×Close