வீடியோ: என்னவொரு பாசம்! ஓராண்டு கழித்து வந்த எஜமானரிடம் அன்பை பொழியும் சிறுத்தை

பெரும்பாலான விலங்குகள் தங்களுடைய எஜமானர்கள் மீது பேரன்பை வைத்திருக்கும். புலி, சிங்கம் போன்ற விலங்குகளை கூட தங்கள் அன்பால் கட்டிப்போடும் மனிதர்கள் உண்டு.

பெரும்பாலான விலங்குகள் தங்களுடைய எஜமானர்கள் மீது பேரன்பை வைத்திருக்கும். புலி, சிங்கம் போன்று அச்சுறுத்தல் விளைவிக்கும் விலங்குகளை கூட தங்கள் அன்பால் கட்டிப்போடும் மனிதர்கள் உண்டு.

நாய்கள் தங்களுடைய எஜமானர்கள் எங்காவது வெளியூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பினால் அவர்களின் மீது தாவி, அவர்களது கன்னங்களை நாக்கால் தடவி, அவர்களது மடியில் படுத்து பாசத்தை பொழிந்துவிடும். அவர்கள் இல்லாதபோது, யாரேனும் அதனை சரியாக கவனிக்காவிட்டால் எஜமானர்களிடம் காட்டிக்கொடுப்பது போல் முகபாவனையை வைத்திருக்கும்.

நாய்கள் மட்டும்தான் இத்தகைய அன்பை வைத்திருக்கும் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானது. தென்னாப்பிரிக்காவில் கேப்ரியல் என்ற சிறுத்தை, தன்னை பேணி பாதுகாத்து வளர்த்த டால்ஃப் சி.வோல்கர் என்பவர் ஓராண்டு கழித்து, அதன் வசிப்பிடத்திற்கு திரும்புகையில் அவர் மீது பாசத்தை பொழியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டால்ஃப் பல விலங்குகளை பேணி காத்து வந்தாலும், இந்த சிறுத்தை அவர் மீது தனித்த பாசத்தை வைத்திருக்கிறது. தன் கையால் உணவு தருதல், இரவின் ஒன்றாக உறங்குதல் என டால்ஃப் அந்த சிறுத்தையுடன் நேரத்தை செலவிடுகிறார்.

×Close
×Close