பிம்பத்துடன் எலும்புத் துண்டை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் பாசக்கார நாய்! வைரல் வீடியோ

தான் வைத்திருக்கும் எலும்புத் துண்டை, பிம்பத்துடன் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது இந்த பாசக்கார நாய்!

விலங்குகளால் நம்மைப் போல மொழிகளில் பேச முடியாது என்றபோதிலும், அதன் செயல்பாடுகள் சில சமயங்களில் வாழ்வின் மிகப்பெரிய பாடத்தை கற்பித்துவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது இந்த விலங்கின் செயல். அன்பு, இரக்கம் என பல்வேறு உணர்வுகளை நாம் அவைகளிடம் இருந்து அறிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட சம்பவம் தான் பிரேசில் நாட்டில் நிகழ்ந்துள்ளது. நாய் ஒன்று தனது பிம்பத்தை பார்த்து, மற்றொரு நாய் இருப்பதாக நினைத்து அதற்கும் தன்னுடைய உணவை பகிர்ந்து கொள்ள நினைக்கிறது. தான் வைத்திருக்கும் எலும்புத் துண்டை, பிம்பத்துடன் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது இந்த பாசக்கார நாய்!

எரிக் ஸ்மித் என்பவர், 25 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த செய்தியை பதிவிடும்போது, 67 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரீட்வீட் மற்றும் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை இந்த வீடியோ அள்ளியிருந்தது.

×Close
×Close