வீடியோ: ’ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு செம்ம ஆட்டம்போடும் ஜாக்கி சான்

இப்போது மீண்டும் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இம்முறை ஷெரின் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ அல்ல,

’ஜிமிக்கி கம்மல்’ காய்ச்சல் எல்லோருக்கும் குறைந்துவிட்டது என நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இப்போது மீண்டும் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இம்முறை ஷெரின் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ அல்ல, ஜாக்கி சான் ஆடிய ஜிமிக்கி கம்மல் பாடலை நெட்டிசன்கள் அதிகம் விரும்பியுள்ளனர்.

குங்ஃபூ யோகா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஜாக்கி சான் இந்திய ஸ்டைலில் செம்ம ஆட்டம் ஆடியிருப்பார். அந்த பாடலை, அவர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடுவதுபோன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகர்கள் சோனு சூட், திஷா பதானி ஆகியோரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஜிம்மி கிம்மல் எனும் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர், ஜிமிக்கி கம்மல் பாடல் தனக்கு பிடித்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல், சமீபத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஜிமிக்கி கம்மல் பாடலை கேட்பதை நிறுத்த முடியவில்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

×Close
×Close