வீடியோ: அமெரிக்க வீதிகளில் சுற்றித்திரிந்த வடகொரிய அதிபர் கிம்? ஆச்சரியத்தில் மக்கள்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ஐ போன்று தோற்றமளிக்கும் நபர் ஒருவர், அமெரிக்காவின் வீதிகளில் சுற்றித்திரியும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ஐ போன்று தோற்றமளிக்கும் நபர் ஒருவர், அமெரிக்காவின் வீதிகளில் சுற்றித்திரியும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தொடர் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்நாடு அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-க்கும் பல முறை வார்த்தை போர் மூண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ஐ போன்று தோற்றமளிக்கும் நபர் ஒருவர், அவரைப்போலவே ஆடை உடுத்தி, வீதிகள் சுற்றி திரியும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் ஹிட்டாகியுள்ளது.

அவரைப்பார்த்து, மக்கள் ஆச்சரியப்பட்டு ‘கிம் ஜாங் உன்’, ‘ராக்கெட் மேன்’, என அழைக்கின்றனர். சிலர் பயப்படுகின்றனர். சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அந்நபர் ட்ரம்ப் டவருக்குள் சென்று, “டொனால்ட் ட்ரம்பை பார்த்தீர்களா”, என்று கேட்பது பார்ப்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close