சீனா: கடைக்குள்ளேயே காரை பார்க் செய்து பர்ச்சேஸ்... என்ன ஒரு புத்திசாலித்தனம்! (வீடியோ)

சிட்டிக்குள் கார் ஓட்டுவதே சிரமமா இருக்கும் இந்த காலகட்டத்தில், பார்க்கிங் பண்ண அதவிட சிரமமாக தான் இருக்குது. அதுக்குதான் ஒரு புது டெக்னிக் கண்டுபிடிச்சு காரை பார்க் பண்ணீருக்காரு இந்த நபர்.

சீனாவில் உள்ள ஜென்சியாங் பகுதியில் தான் இந்த வினோத சம்வம் நடந்துருக்குது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடைக்கு காரில் வரும் நபர் சிப்ஸ் பாக்கெட்டும், தயிரும் வாங்க வந்திருக்கிறாராம். இதற்காக கார் பார்க்கிங் வரை செல்ல வேண்டுமா என நினைத்த அவர் காரை நேராக கடைக்குள்ளேயே பார்க் செய்துவிட்டார். இதைக்கண்ட கடை ஊழியரோ அதிர்ச்சியடைந்ததோடு, அந்த நபர் கேட்டவற்றை எடுத்துக் கொண்டு பில்லையும் போட்டுக் கொடுத்துவிட்டார். சிசிடிவி-யில் பதிவாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது

×Close
×Close