தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் போது தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! ஷாக் வீடியோ

தள்ளுவண்டியில் கொண்டு சென்ற குழந்தை தண்டவாளத்தில் விழுந்துவிடுகிறது. பதற்றம் அடைந்த அந்த தாய், தனது குழந்தையை தண்டவாளத்தில் இறங்கி மீட்கிறார்.

ரயில் வரும் முன்னர் தண்டவாளத்தில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வெஸ்ட் ரைடு ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது, ரயில்வே நிலையத்தில் உள்ள நடைமேயில், தாய் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் செல்வதாக தெரிகிறது. அப்போது, அவரின் ஒரு குழந்தையை தள்ளுவண்டியில் கொண்டு சென்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், அந்த குழந்தையானது தள்ளுவண்டியுடன் சேர்ந்து கதண்டவாளத்தில் விழுந்துவிடுகிறது.

இதனால், பதற்றம் அடைந்த அந்த தாய், தனது குழந்தையை தண்டவாளத்தில் இறங்கி மீட்கிறார். அவர் குழந்தையை மீண்ட அடுத்த சில நொடிகளில், அங்கு ரயிலும் வந்துவிடுகிறது. ரயில் வரும் முன்னர் சில நொடிகளில் நிகழ்ந்த இந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

×Close
×Close