கட்டுக்கடங்காத யாஸ்; கவலை அடைய வைத்த சூறாவளி; வைரலாகும் வீடியோக்கள்

சூறாவளி காற்றை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் சின்சுரா, ஹூக்லி மற்றும் வடக்கு 24 பாரகனாஸ் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Video of ‘tornado’ in West Bengal districts flood social media

Video of ‘tornado’ in West Bengal districts flood social media : இன்று கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே யாஸ் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைக்கு மிக அருகே மையம் கொண்டிருக்கும் புயலால் மேற்கு வங்கம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான காற்று வீசி வருகிறது. பலத்த மழை பெய்துவருகின்ற காரணத்தால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, சூறாவளி காற்றை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் சின்சுரா, ஹூக்லி மற்றும் வடக்கு 24 பாரகனாஸ் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 40 வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது. 2 பேர் இதில் பலியாகினர் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Video of tornado in west bengal districts flood social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com