சீனாவில் பயணிகள் அனைவரும் இணைந்து ஒரு ரயிலை தள்ளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகரில் உள்ள டோங்சிமென் என்ற ரயில் நிலையத்தில், கடந்த 3-ஆம் தேதி ரயில்பாதையில் இரவு சுமார் 8 மணியளவில் ரயிலுக்கு இடையே மிக நெருக்கமாக சிக்கிக்கொண்டார். அந்நபரைக் காப்பாற்ற பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து ரயிலையே கடினப்பட்டு தள்ளிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவரை மீட்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடையவே பயணிகள் அனைவரும் இந்த அசாத்திய முயற்சியில் இறங்கி வெற்றி கண்டனர்.