சீனாவில் கடுங்குளிர்: நொடி பொழுதில் ஐஸ்கட்டியாக மாறும் முட்டை

சீனாவின் ஹூசாங் மாவட்டத்தில் நிலவும் அதிப்படியான குளிரால் பச்சை முட்டை மற்றும் சூடாக சமைத்த நூடூல்ஸ் ஆகியவை சிறிது நேரத்தில் பனிக்கட்டியாகிறது.

சீனாவில் நிலவி வரும் கடுங்குளிரால் பச்சை முட்டை, நூடூல்ஸ் போன்றவை நொடி பொழுதில் ஐஸ்கட்டியாக மாறும் வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே, மனிதர்களால் அதிகப்படியான குளிர், அதிகப்படியான வெப்பம் இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாது. இருப்பினும், தற்போது மாறி மாறி நிலவும், தட்வெப்ப நிலைகளால் மனிதர்கள் அதற்கேற்ப வாழ தயாராகி வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் -62 டிகிரி செல்சியஸில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் இங்கு வாழும் மக்கள் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் ஹூசாங் மாவட்டத்தில் நிலவும் அதிப்படியான குளிரால் பச்சை முட்டை மற்றும் சூடாக சமைத்த நூடூல்ஸ் ஆகியவை சிறிது நேரத்தில் பனிக்கட்டியாக மாறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெண் ஒருவர் இன்சண்ட் நூடூல்ஸை சமைக்கிறார். ஆவி பறக்கும் அந்த நூடூல்ஸ் கண் இமைக்கும் நேரத்தில் ஐஸ்கட்டியாக மாறுகிறது.

அதே போல் அந்த பெண் தரையில் பச்சை முட்டையை உடைத்து ஊற்றுகிறார். அடுத்த நொடியே முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டுமே பனிக்கட்டியாக மாறுகிறது. இந்த வீடியோ தற்போது சீன ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சீன மக்கள் கடுமையான குளிரால் அன்றாட வாழ்வில் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதை இந்த வீடியோ தெரியப்படுத்தியுள்ளது.

×Close
×Close