ஓடும் பேருந்து முன்னே பெண்ணை தள்ளிய நபர்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பெண்! ஷாக் வீடியோ

அந்த பெண் பேருந்து செல்லும் சாலையில் விழுகிறார். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அந்த பெண், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயர்தப்பிக்கிறார்

ஜாக்கிங் சென்ற நபர் எதிரே வரும் பெண் ஒருவரை பேருந்தின் முன்னே தள்ளிவிடும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

லண்டனில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த சிசிடிவி வீடியோவை மெர்டன் போலீஸார் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள புட்னி பகுதியில் சாலையோரத்தில் 30-வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, எதிரே, பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அந்த பெண்ணுக்கு எதிரே ஒருபுறம் பேருந்து வருகிறது. மற்றொரு புறம் ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்.

திடீரென ஜாக்கிங் சென்ற நபர், அந்த பெண்ணை இடித்துத் தள்ளிவிட்டுச் செல்கிறார். இதனால், அந்த பெண் பேருந்து செல்லும் சாலையில் விழுகிறார். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அந்த பெண், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயர்தப்பிக்கிறார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்தை நிறுத்தியவுடன், பயணிகள் அப்பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். ஆனால், ஜாங்கிங் சென்ற நபரோ அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறார் சுமார் 15-நிமிடம் கழித்து ஜாக்கிங் சென்ற அந்த நபர் அந்த பாலத்தின் மறுபக்கம் வழியாக திரும்பி சென்றுள்ளார். அந்த சமயம், பாதிக்கப்பட்ட அந்த பெண், ஜாக்கிங் சென்ற அந்த நபரிடம் அணுகி பேச முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நபரோ அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் அப்படியே ஜாக்கிங் சென்றுவிட்டாராம். இப்படியும் வினோதமான மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.

×Close
×Close