16 வருடங்களுக்கு பிறகு வைரலான கங்குலியின் டான்ஸ்!!!

2002 ஆம் ஆண்டு  முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி  பார்ட்டில் ஒன்றில் ஆடிய டான்ஸ்  ஒன்று  தற்போது  வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், கிரிக்கெட் பயிற்சியாளர், கிரிக்கெட் ஆலோசகர் என பன்முகங்களை கொண்ட கங்குலி, 2002 ஆம் ஆண்டு  பார்ட்டி ஒன்றில்  மகிழ்ச்சியுடன்,  தன் நண்பர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ யார் எடுத்தார்கள்? இப்போது அதே  வீடியோவை யார் பதிவிட்டார்கள்?  என்பது குறித்த எந்த முழு விபரமும் தெரியவில்லை. ஆனால்,  இரண்டு நாட்களாக இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2002 ம் ஆண்டு நாட் வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிரத்யேக பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது. இந்த பார்ட்டியில் தான் கங்குலில் தனது நண்பர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன்  மெய் மறந்து நடனம் ஆடுகிறார் என்ற தகவலும்  வெளியாகியுள்ளது.

நீங்களும் அந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க…

 

×Close
×Close