New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/old-man-flooded-street_759.jpg)
சமீபத்தில், சீனாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், முதியவர் ஒருவர் தன் மனைவியை முதுகில் சுமந்து வெள்ளத்தில் சாலையை கடக்கிறார்
காதலுக்கு வயது நிச்சயம் தடையாக இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எவ்வளவு வயதானாலும் காதல் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். நாம் அன்பு செலுத்தும் ஒருவருக்காக எத்தகைய தடைகளை தாண்டவும் எந்நேரமும் தயாராகவே இருக்கிறோம்.
அப்படித்தான், சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவரும் தன் மனைவிக்காக, தன் வயதையும் மீறிய ஒரு செயலை செய்திருக்கிறார். அவருடைய வயதில் இதனை சாதனை என கூட சொல்லலாம்.
சமீபத்தில், சீனாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், முதியவர் ஒருவர் தன் மனைவியை முதுகில் சுமந்து வெள்ளத்தில் சாலையை கடக்கிறார். இச்சம்பவம் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், அவருடைய வயதில் தான் அன்பு கொண்டிருக்கும் மனைவிக்காக இதனை செய்தது மற்றவர்கள் நெகிழும் வகையில் அமைந்துள்ளது. இச்சம்பவத்தை அங்கிருந்த யாரோ வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ யுடியூப் இணையத்தளத்தில் Shanghaiist எனும் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை பலரும் விரும்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரது உள்ளங்களையும் இச்சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இந்த கட்டுரை வெளியாகும் வரை 2,161 பேர் இந்த விடியோவை பார்த்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.