New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/pregnant-women-dance-taiwan-main_759_janet-hsieh-fb.jpg)
, ஜப்பானில் 21 கர்ப்பிணி பெண்கள் திடீரென ரயில் நிலையத்தில் அசத்தலாக ஆடும் நடன வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களை “அதை செய்யாதே, இதை செய்யாதே”, என சொல்லிக்கொண்டே இருப்பார்கள். “எந்திரிக்கும்போது பொறுமையா எந்திரி”, “ஒருக்களிச்சு படுக்காத”, இதெல்லாம் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் வார்த்தைகள்.
ஆனால், ஜப்பானில் 21 கர்ப்பிணி பெண்கள் திடீரென ரயில் நிலையத்தில் அசத்தலாக ஆடும் நடன வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மால்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில், இளைஞர்கள் திடீரென கூடி நடனமாடுவதை பார்த்திருப்போம். ஆனால், ஜப்பானில் கர்ப்பிணி பெண்கள் திடீரென தைப்பே ரயில் நிலையத்தில் ஆடும் நடன வீடியோ பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில், 4,000-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
கர்ப்பமாக இருப்பதை பெண்கள் எப்படி கொண்டாட்டமாக எதிர்கொள்ளும் வேண்டும் என்பதை அவர்களின் நடனம் உணர்த்துகிறது. சமீப காலமாக கர்ப்பினி பெண்கள் அதிகளவில் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர். இந்த வீடியோவை பார்த்தால், கர்ப்பிணி பெண்கள் நடன பயிற்சியையும் கூடுதலாக மேற்கொள்ளலாம் என உங்களுக்கும் தோன்றும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.