New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/wedding-photoshoot-ruined-759.jpg)
திருமணத்திற்கு முன்பு இயற்கை சூழ்ந்த இடங்களுக்கும், ரொமாண்டிக் என தோன்றும் இடங்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுப்பது சமீப காலமாக பிரபலமாகி வருகிறது.
திருமணத்திற்கு முன்பு இயற்கை சூழ்ந்த இடங்களுக்கும், அவர்களுக்கு ரொமாண்டிக் என தோன்றும் இடங்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுப்பது சமீப காலமாக பிரபலமாகி வருகிறது.
புகைப்படங்கள் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, ஆபத்தான இடங்களுக்கெல்லாம் சென்று புகைப்படங்கள் எடுப்பார்கள். பல சமயங்களில் நாம் என்றுமே மறக்க முடியாத அழகிய புகைப்பட தருணங்கள் அமையும். ஆனால், நம்மை பாதுகாத்துக் கொள்ளாமல், ஆபத்தான இடங்களில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால், நாம் மறக்க இயலாத வலி மிகுந்த தருணங்களும், அனுபவங்களும் கூட ஏற்படலாம்.
அப்படித்தான், கடற்கரையில் புகைப்படங்கள் எடுக்க விரும்பிய இந்த திருமண ஜோடிகளுக்கு வலிமிகு தருணமாக மாறியது. கடற்கரையில் சிறு சிறு பாறைகள் உள்ள இடத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள் அந்த ஜோடிகள். திடீரென பெரும் அலை, அந்த பெண்ணை கீழே விழச்செய்கிறது. அதில், அந்த ஆணும் விழுந்துவிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடற்கரையில் புகைப்படங்கள் எடுக்க செல்வதற்குமுன் இந்த வீடியோவை பார்த்துவிட்டு செல்லுங்கள்.
How to really sweep her off her feet. pic.twitter.com/odHuKUf4wt
— Shanghaiist.com (@shanghaiist) 2 November 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.