வாய்பாட்டை வெறுக்கும் மாணவர்களுக்கு அதை இனிப்பாக்க ஆசிரியரின் புதிய முயற்சி!

வாய்பாடு மட்டும் நன்கு பதிந்து விட்டால் போதும், அவர்களுக்கு கணிதத்தில் ஏற்படும் பிரியத்தை யாரலும் தடுக்க முடியாது.

இப்படி ஒரு டீச்சர் இருந்திருந்தா நான் ஏன் பாஸ்,  மேக்ஸில்  வீக் இருந்து இருக்க போறேன் என்று  புலம்பும்  பலரை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். பள்ளி காலங்களில் அதிகமானோர்  வெறுக்கும் பாடம் எதுவென்று கேட்டால்,  நமக்கு கிடைக்கும்  பதில் கணிதம் ஆகதான் இருக்கும்.

காரணம், 1 வகுப்பில்  இருந்து 5 வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று  சொல்லப்படும் வாய்ப்பாடு . இந்த வாய்ப்பாட்டை மனபாடம் செய்ய  மாணவர்கள் படும் பாடும் இருக்கிறேதே. அய்யோ சொல்லி மாளாது. ஆனாலும், மற்ற பாடங்களை காட்டிலும் கணிதம் வாழ்க்கையிலும் நமக்கு பெரிதளவில் உதவும்.

கணிதத்திற்கு ஆரம்ப புள்ளியே வாய்பாடு தான். அதனால் தான் பல கணித ஆசிரியர்கள் 12 வகுப்பு மாணவர்கள்ளை கூட  தினமும் வாய்பாடு சொல்லி பழக வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். பெசிக் என்று சொல்லப்படும்  வாய்பாடு மட்டும் நன்கு பதிந்து விட்டால் போதும்,   அவர்களுக்கு கணிதத்தில் ஏற்படும் பிரியத்தை யாரலும்  தடுக்க முடியாது.

அந்த வகையில், சமீபத்தில் முகம் தெரியாத ஆசிரியர், ஒருவர் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ட்ரெண்ட் அடித்து வருகிறார்.  அவரின் பெயர் மற்றும் விபரம் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், மாணவர்களுக்கு அவர், வாய்ப்பாட்டை சொல்லி தரும் விதம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

காஸ்மீரில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியரான அவர்,    கேட்சியான பாடல் மெட்டுகளை போட்டு வாய்ப்பாட்டை சொல்லி தருகிறார்.  பள்ளியின் வகுப்பிலியே அவர்  மாணவர்களுக்கு வாய்பாடு சொல்லி தருவதை முகம் தெரியாத நபர் ஒருவர்,  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close