பேருந்து, ரயில் ஆகியவற்றில் பயணம் செய்யும்போது, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு பெரும்பாலானோர் இருக்கை தர மறுப்பார்கள். “என் பெயர் இந்த இருக்கையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது”, என்பது போல் இறுக்கமாக சீட்டில் அமர்ந்திருப்பார்கள்.
அதேபோல், சீனாவின் நாஞ்சிங் நகரில் மெட்ரோ ரயிலில் நின்றுகொண்டிருக்கும் வயதான பெண் ஒருவர், இருக்கையில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவரிடம் தனக்கு இருக்கை அளிக்குமாறு கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் மறுத்துவிடுகிறார். அந்த இளைஞரிடம் தனக்கு இருக்கையை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அந்த பெண்.
எல்லோரும் அந்த ரயிலில் அமர்ந்திருப்பதால், அவர்கள் இருவருடைய வாக்குவாதத்தையும் யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. சமாதானப்படுத்தவும் இல்லை.
அப்போது அந்த பெண் என்ன செய்தார் தெரியுமா? அந்த இளைஞரது மடியிலேயே அமர்ந்துவிட்டார். அதனை யாரோ ஒருவர் செல்ஃபோனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது போக்குவரத்தின் போது தாமாக முன்வந்து இருக்கையை தர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இச்சம்பவம் உள்ளது.