1 அல்ல 100 அல்ல லட்சம் முறை ‘தளபதி’ என கூறிய விஜய்யின் வெறித்தனமான ரசிகர்!

அதே சமயம் இது தேவையில்லாத முயற்சி

அதே சமயம் இது தேவையில்லாத முயற்சி

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
லட்சம் முறை தளபதி

லட்சம் முறை தளபதி

தளபதி விஜய்யின் எத்தனையோ விதமான ரசிகர்களின் செயல்கள் குறித்து இதுவரை படித்திருப்போம், விமர்சித்திருப்போம். ஆனால் கடந்த 2 நாட்களாக நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஒருவரின் வீடியோ விஜய் ரசிகர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையுமே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Advertisment

அப்படி என்ன செய்தார்? என்று கேட்கிறீர்களா? 1 அல்ல 100 அல்ல லட்சம் முறை 'தளபதி' என்ற சொல்லை தொடர்ந்து கூறி தன்னை வெறித்தனமான விஜய் ரசிகன் என்று நிரூப்பித்து காட்டியிருக்கிறார் அந்த இளைஞர்.

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல் காலகட்டத்திற்கு பிறகு அதிகப்படியான  ரசிகர்கள் கொண்டவர்கள் அஜித் - விஜய். இவர்கள் இருவருமே என்றுமே நண்பர்கள் தான் என்பதை இரண்டு பேரும் , பல்வேறு தருணங்களில் பல மேடைகளில் காட்டி இருக்கின்றனர்.

ஆனால், இவர்களின் அதிதீவிர ரசிகர்களான தல- தளபதி ரசிகர்களுக்கு இடையே படம் ரீலீஸ் தேதி தொடங்கி, போஸ்டர், கட் அவுட், டிக்கெட் புக்கிங், என பல காரணங்களுக்காக சின்ன சின்ன மோதல்கள் அல்லது வாய் சண்டை வருவது வழக்கம். இந்த சண்டை அடிதடி வரை கூட பல இடங்களில் சென்றுள்ளது.

Advertisment
Advertisements

publive-image

சமீபத்தில் கூட சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதுப் போன்ற தேவையில்லாத சர்ச்சைக்களுக்கு இடம் கொடுக்காத வகையில் விஜய்- அஜித் இருவருமே தங்களது படங்களை ஒரே தேதிகளில் ரிலீஸ் செய்வதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். அதே போல் ரசிகர்களிடம் இருவருமே பலமுறை கேட்டுக் கொண்டது இதுதான்.

“நாங்கள் எங்கள் தொழிலை செய்கிறோம். எங்களை திரையில் ரசியுங்கள். உங்களை உற்சாகப்படுத்த, திரையில் 3 மணி நேரம் உங்களை மகிழ்விக்க தான் நாங்கள் நடிகர்களாகி இருக்கிறோம். ஆனால் ரசிகர்கள் கிடையே சண்டை வேண்டாம்.. தேவையில்லாத செலவுகள்(கட் அவுட், பால் அபிஷேகம்) போன்றவற்றை தவிர்த்து விடுங்கள் நண்பா” என்று பல இடங்களின் கூறி இருக்கிறார்கள்.

publive-image

இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டாலும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுவதில் தயங்குவதில்லை. வித்யாசமாக, அதிக ரிஸ்க் எடுத்து பல விதங்களில் தங்களது வெறித்தனமான அன்பை காட்டி விடுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் வெறித்தனமாக ரசிகன் என கூறி லட்சம் முறை தளபதி என பெயரை உச்சரித்துள்ளார்  இந்த இளைஞர். சுமார் 11 மணி நேரம் அவர் விடாமல் 'தளபதி' என கூறி அந்த லைவ் வீடியோவை யூடியூப்பிலும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல் இந்த வீடியோ விஜய் ரசிகர் மன்றம் மூலம் விஜய்யின் பார்வைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வித்யாசமான முயற்சியை செய்த விஜய்யின் ரசிகருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதே சமயம் இது தேவையில்லாத முயற்சி என்றும் கருத்துகள் மேலோங்கி உள்ளன.

Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: