சொன்னது சரி தான்; ஆனா இடம் தான் சரியில்ல! வறுபடும் தல; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இது பார்ப்பதற்கு சிகரெட் கம்பெனி வைத்திருப்பவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டுவது போல் அத்தனை அபத்தமாக இருக்கிறது

Viral news MS Dhoni : சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் தோனி, எப்போதும் தன்னுடைய சொந்த வாழ்வில் நடைபெறும் நிகழ்வும் குறித்தோ, தன்னுடைய பயணம் குறித்தோ அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பகிர்வதில்லை. சி.எஸ்.கேவின் அதிகாரப்பூர்வ தளங்கள் அல்லது சாக்‌ஷியின் சமூகவலைதளங்களில் தான் தல என்ன செய்கிறார் என்றே தெரியவரும்.

சமீபத்தில் சென்னை ஐபிஎல் அணியான சூப்பர் கிங்க்ஸ் தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் தோனி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர் ஒரு மரத்தால் செய்யப்பட்ட விடுதி ஒன்றில் நின்று கொண்டிருக்கிறார். முழுமையாக மரத்தால் செய்யப்பட்டிருக்கும் அந்த கட்டுமானத்தின் அருகே “மரம் வளர்ப்போம்” என்ற சைன் போர்டும் இருக்கிறது. நல்லெண்ணெங்களை விதைக்கிறார் தல என்று ஒரு கேப்சனுடன் அந்த போட்டோவை பகிர சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

அவரு சொன்ன கருத்து என்னவோ சரி தான்… ஆனா அத சொல்ல வேண்டிய இடம் தான் அது இல்லை. பலரும் அந்த புகைப்படத்தை வறுத்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இது பார்ப்பதற்கு சிகரெட் கம்பெனி வைத்திருப்பவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டுவது போல் அத்தனை அபத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

பலர் தோனிக்கு ஆதரவாகவும் தங்களின் குரலை எழுப்பியுள்ளனர். சி.எஸ்.கே. குழுவே தோனியை கலாய்ப்பதாகவும் பலர் ட்வீட் வெளியிட்டனர்.

இந்த புகைப்படம் குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral news ms dhoni draws flak for saying plant trees save forests

Next Story
சுதந்திரம் என்றால் இப்படித்தான் இருக்குமோ! கூண்டில் இருந்து வெளியேறிய புலிக்கு என்ன ஒரு வேகம்?viral video, tiger viral video, viral videos online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X