நம் அன்றாட வாழ்க்கையில் நம்மிடத்திலும் நம்மைச் சுற்றிலும் இதோ ஒன்று வியக்கத்தக்க வகையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை நமக்கு இதோ ஒரு தகவலைத் சொல்லித் தரும். அப்படி அதிசயத்தக்க நிகழ்வுகள் அதுவும் வெளிநாடு சார்ந்த நிகழ்வுகள் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். தெரியாத ஒன்றை தெரிந்து கொள்கிறோம் என்ற அனுபவம் தரும்.
அந்தவகையில், வெளிநாட்டில் உள்ள நெவாடா என்ற பாலைவனப்பகுதியில் 1916-ம் ஆண்டு மக்கள் கிணறு தோண்டிய போது வெந்நீர் ஊற்றி பொங்கி வந்தது. பாலைவனத்தில் நடுப்பகுதியில் பாசனத்திற்காக கிணறு தோண்டிய போது கொதிக்கும் வெந்நீர் பொங்கி வழிந்துள்ளது.
ஃப்ளை கீசர்
அதுவும் சாதாரணம் அல்ல, 200 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் கொண்ட வெந்நீர் பொங்கி வந்துள்ளது. ஆனால் இது கண்கவர் நீருற்றாக எப்படி மாறியது என்றால்? அங்கே அறிவியல் உள்ளது. கால்சியம் கார்பனேட் படிவுகள் தேங்கி கூம்பு வடிவத்தில் உருவாகி, வண்ணமயமான தெர்மோபிலிக் ஆல்கேவாக (பாசிகள்) (thermophilic algae) உருவாகியுள்ளன.
கால்சியம் கார்பனேட், ஆல்கே இது போன்று வளர்ந்து வந்துள்ளன. இது ஃப்ளை கீசர் என்று சொல்லப்படுகிறது. இந்த ஊற்றில் இருந்து வெந்நீர் பாய்ந்து வெளியேறுகிறது, அதனால் ஃப்ளை கீசர் (Fly Geyser) என்று அழைக்கப்படுகிறது. இது நீருற்று பற்றி ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/