கொஞ்சம் பிசகியிருந்தாலும்… துப்பாக்கியுடன் வந்த நபரை பாதிரியார் என்ன செய்தார் பாருங்கள்!

ஒன்று நான் சாக வேண்டும் இல்லையென்றால் மற்ற யாரையும் அவர் தாக்குதலில் கொல்வதற்கு முன்பு அவரை பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் ஓடியது என்று கூறியுள்ளார்.

Viral video, trending viral video, videos online

viral video of Pastor tackles man waving gun: அமெரிக்காவில் அமைந்துள்ள நாஷ்வில் லைட் மிஷன் பென்டெகோஸ்டல் தேவாலயத்தில் துப்பாக்கியுடன் வந்த நபரை சாமர்த்தியமாக பிடித்த பாதிரியாரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது கையில் துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருக்கும் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. துப்பாக்கி வைத்திருக்கும் நபர் மற்றவர்களை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது இசக்கியேல் என்ற பாதிரியார் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த இடத்தில் இருந்து விரைவில் நகர்ந்து துப்பாக்கி வைத்திருந்த நபரை பின்னால் இருந்து தாக்கி தரையில் விழ வைத்தார்.

செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அவர் “அந்த நபர் கையில் துப்பாக்கியை எடுத்தவுடன் விரைந்து செயல்பட துவங்கினேன். அங்கே என்ன நடக்கிறது என்று யோசித்தேனா இல்லை அப்படியே நின்றுவிட்டேனா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் துப்பாக்கியை உயர்த்தும் போதே நாங்கள் அனைவரும் செத்துவிட்டோம் என்று நினைத்து விரைவாக செயல்பட்டேன். ஒன்று நான் சாக வேண்டும் இல்லையென்றால் மற்ற யாரையும் அவர் தாக்குதலில் கொல்வதற்கு முன்பு அவரை பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் ஓடியது என்று கூறியுள்ளார்.

பாதிரியாரின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of pastor tackles man waving gun during church service

Next Story
Viral Video: நீ என்னடா தண்ணிக்குள்ள இருந்து தொரத்திட்டு வர்ற? புலியை பார்த்ததும் தெறித்து ஓடும் மான்!tiger, viral video, trending viral video, tiger videos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express