Viral video of python : மலைப்பாம்புகள் உயரத்தில் பெரிதாக இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு உயரமாக, இத்தனை எடை கொண்டதாக இருக்கும் என்றும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பாம்பு ஒன்றை ஜே.சி.பி. இயந்திரம் வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றை ஜே.சி.பி. இயந்திரம் தூக்கிச் செல்கிறது. பார்க்கவே அச்சுறுத்தலைத் தரும் இந்த வீடியோவை இதுவரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.
பாம்புகள் அவற்றின் வாழிடங்களில் நிம்மதியாக விடப்பட்டால் இவ்வளவு உயரம் வரை வளரும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனாலும் இவ்வளவு பெரிய பாம்பை நீங்கள் எங்காவது பார்த்திருக்கின்றீர்களா? இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil