New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z497.jpg)
தோனி மகள் ஜிவாவுடன் விராட் கோலி விளையாடும் வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி (D\L) விதிப்படி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டி முடிந்த பிறகு, கேப்டன் கோலி, ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டிற்கு சென்று, தோனியின் மகள் ஜிவாவுடன் ஜாலியாக பொழுதைப் போக்கியுள்ளார்.
கோலி மொபைலில் தோனி இதனை ஷூட் செய்ய, அந்த வீடியோவை கோலி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும், ஒரு எக்ஸ்ட்ரா செய்தி. அந்த வீடியோவை சற்று உற்றுநோக்கி கவனித்தால், பின்னாடி ஏதோ பைக் ஷோரூம் இருப்பது போல் தோன்றும். அது பைக் ஷோரூம். தோனி தன் வீட்டில் சொந்தமாக வைத்திருக்கும் மிக காஸ்ட்லியான பைக் ஷோரூம். உலகின் காஸ்ட்லியான பைக்குகள் அங்கு அணிவகுத்து நிற்கின்றனவாம். மனுஷன் வாழ்றார்!!
My reunion with Ziva. What a blessing it is to be around pure innocence ????❤ pic.twitter.com/7IpvTyynoA
— Virat Kohli (@imVkohli) 8 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.