வீடியோ:”அப்பா, அந்த இரவில் என்னை காப்பாற்ற வருவீர்கள் என நினைத்தேன்”: பெண்ணின் வலிமிகு வார்த்தைகள்

பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது சந்தித்த துயர்மிகு தருணங்களை பெண் ஒருவர், தன் தந்தைக்காக வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By: October 28, 2017, 2:58:43 PM

தன் பெற்றோர் விவாகராத்து செய்தபின், தன் தந்தையின் பிரிவால் வாடியது குறித்தும், பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது சந்தித்த துயர்மிகு தருணங்களை பெண் ஒருவர், தன் தந்தைக்காக வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் அஃப்ரீன் கான் என்ற பெண், சிறு வயதில் தனக்கு பலூன்கள்கூட வாங்கிக்கொடுக்க நேரமில்லாமல், பணத்தை மட்டுமே தருவார் என கூறுகிறார். மேலும், தங்களுடன் நேரம் செலவழிக்காதது குறித்தும் பகிர்ந்து கொள்வார். ஆனால், அஃப்ரீனுக்கு ‘ஹீரோ’ அவருடைய தந்தைதான். சிறுசிறு விஷயங்களில் அவரது தந்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டதாக தெரிவிக்கும் அஃப்ரீன் கான், தன் அம்மா, அப்பாவுக்கு விவாகரத்தானபின் தான் எதிர்கொண்ட இன்னல்களை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்தார். ஆனால்,

விவாகரத்துக்கு பின் அஃப்ரீன் கானின் அம்மா வேறொரு திருமணம் செய்துகொள்கிறார். “என்னுடைய புதிய அப்பா நல்லவர். எனக்கு தினமும் சாக்லேட்டுகள் வாங்கித்தருவார்.”, என கூறுகிறார். ஆனால், ஒருநாள் இரவில் அவருடைய அறைக்கு சென்று அஃப்ரீன் கானின் ‘புதிய அப்பா’ அஃப்ரீனுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். அன்றைய தினம் தன் அப்பா வந்து காப்பாற்ற மாட்டாரா என அழுதிருக்கிறார் அஃப்ரீன்.

இறுதியில், “நீங்கள் தற்போது நன்றாக இல்லை என கேள்விப்படுகிறேன். உங்களை பார்த்துக்கொள்ளுங்கள் அப்பா. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்”, என தந்தை மீதான அன்பை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Watch a daughters cry for her father and how a dreadful night changed her life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X