வேட்டையாடச் சென்று நீர்யானையிடம் கடிவாங்கிய சிங்கம்! வீடியோ

நீர் யானை தனது பெரிய வாயினால், நச்சென ஒரு கடி கடித்து தூக்கிவிடுகிறது. உயிர் பிழைத்தால் போதும் என எஸ்கேப் ஆகிறது...

சிங்கங்கள் கம்பீரமாக வேட்டையாடி உணவை எடுத்துக் கொள்வதை நாம் பெரும்பாலும் தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். ஆனால், அவ்வாறு வேட்டையாட செல்லும்போது, அதே சிங்கங்கள் சில சமயங்களில் தலைதெறிக்க ஓடுவதும் உண்டு.

அப்படிப்பட்ட வீடியோ தான் இது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே! அது தான் இங்கு நடந்திருக்கிறது. ஆனால், இங்கு சறுக்கியது யானை அல்ல, சிங்கம்.

இந்த வீடியோவில், நீர் யானை ஒன்று ஆபத்தை அறியாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. பின்னால், நைசாக வரும் பெண் சிங்கம் ஒன்று, இன்றைய இரையை பார்த்துவிட்டோம் என எண்ணி நீர் யானையின் பின்புறமாக நெருங்குகிறது. அப்போது, சிங்கத்தின் வருகையை சூதாரித்துக் கொண்ட நீர்யானை, அந்த சிங்கத்தை விடாமல் துரத்துகிறது.

அவ்வளவு பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று மெல்ல ஓடுவது போல தெரிகிறது அந்த சிங்கம். பின்னால், துரத்திய நீர் யானை தனது பெரிய வாயினால், நச்சென ஒரு கடி கடித்து தூக்கிவிடுகிறது. பின்னர் என்ன! உயிர் பிழைத்தால் போதும் என எஸ்கேப் ஆகிறது அந்த சிங்கம். கென்யாவில் உள்ள மாசாய் மாராவில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது.

×Close
×Close